YouTurn

சென்னையில் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

சென்னையில் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்படவில்லை என்று தவறாக பரவும் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது தொடர்பாக கடந்த 11ஆம் தேதி போரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்பவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த மறுநாளே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரவிய செய்தி

தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞன் இன்னும் கைது செய்யப்படவில்லை - பேசு தமிழா பேசு, யூட்யூப்

image.png

Youtube Link

விரிவான விளக்கம்

நவம்பர் 10ஆம் தேதி, சென்னையில் நள்ளிரவில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தூய்மை பணியாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை இன்னும் கைது செய்யவில்லை என்று பேசு தமிழா பேசு என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வருகிறது.


உண்மை என்ன? 

இது குறித்து முதலில் தங்களை ஆய்வினை தொடங்கினோம். அப்போது விகடன் ஊடகத்தில் நவம்பர் 11 அன்று, “சென்னை: தூய்மைப்பணியாளரிடம் தவறாக நடந்துகொண்ட ஆந்திரா இளைஞர் - கைது செய்த காவல்துறை” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ”சென்னை அடையாறு பாலம் அருகில் 50 வயது தூய்மைப் பணியாளர் ஒருவர் தூய்மைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துக் கொண்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்தப் பெண், கையில் இருந்த துடைப்பத்தால் அந்த இளைஞரை சரமாரியாக அடித்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போரூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும்ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா (25) என்ற இளைஞரைக் கைது செய்திருக்கிறதுஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் நக்கீரன் ஊடகத்தில் ”இளைஞரின் அருவருக்கத்தக்கச் செயல்; வெளுத்து வாங்கிய பெண் தூய்மை பணியாளர்!” என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் ”போலீசார் விசாரணையில் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் இருந்த எண்ணை வைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதன் அடிப்படையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பச்சு சாய் தேஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். 25 வயதான அந்த இளைஞர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் எனக் கூறப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, சென்னை அடையாறு மேம்பாலம் அருகே தூய்மை பணியாளரிடம் பாலியல் அதுமீறலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த பச்சூ சாய் தேஜா என்பவரை தமிழ்நாடு போலீஸார் கைது செய்துள்ளனர். இதனை மறைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தவறான தகவலை பேசு தமிழா பேசு என்ற யூட்யூப் பக்கம் பரப்பி வருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க