YouTurn

பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதரா ?| உண்மை என்ன ?

பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதரா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தரையில் நிற்கும் மனிதர் கைகளை அசைப்பதற்கு ஏற்ப வானில் இருக்கும் பறவைகள் கூட்டமாய் ஒவ்வொரு வடிவத்திற்கு மாறிக் கொண்டே இருப்பதை கீழ்காணும் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ கடந்த ஆண்டில் இருந்தே " பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் " என்கிற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை பார்க்க...

பரவிய செய்தி





பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் !








Facebook link | archive link 

விரிவான விளக்கம்

தரையில் நிற்கும் மனிதர் கைகளை அசைப்பதற்கு ஏற்ப வானில் இருக்கும் பறவைகள் கூட்டமாய் ஒவ்வொரு வடிவத்திற்கு மாறிக் கொண்டே இருப்பதை கீழ்காணும் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ கடந்த ஆண்டில் இருந்தே " பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் " என்கிற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளதை பார்க்க முடிந்தது.





உண்மை என்ன ?  

வீடியோவில் இருக்கும் நபர் பறவைகளை பழக்கி வைத்து, இப்படி செய்ய வைத்துள்ளார் என நினைத்தே இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். உண்மையில் வீடியோவில் இருப்பது நிஜ பறவைகளே அல்ல. 25 நொடிகள் கொண்ட வீடியோவில் 10-வது நொடியில் அந்த நபரின் பகுதி கட் ஆகி மாறுவதையும், மேலே பறவைகள் பகுதியில் கட் ஆகாததையும் பார்க்க நேரிட்டது.



அதேபோல், தொடக்கத்தில் வீடியோவின் மேலே டிக்டாக் வீடியோக்களில் இடம்பெறுவது போன்ற ஐடி குறியீடு இருந்ததையும் பார்க்க முடிந்தது. மேலும், பின்னணி இசை, ஒலி, வீடியோ உள்ளிட்டவை அனைத்தும் டிக்டாக் வீடியோவாக இருக்கும் என எண்ணத் தோன்றியது. ஆகையால், " birds tiktok video " என்கிற கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது இதே பேட்டனில் பறவைகளை கொண்டு செய்யப்பட்ட வீடியோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.



டிக்டாக் செயலியில் இப்படி பல விதமான வீடியோக்களை செய்து வெளியிட்டு வந்துள்ளனர். டிக்டாக்கில் இப்படியான வீடியோக்கள் வெளியாவது தெரியாத நபர்கள் உண்மையாகவே மனிதரின் கை அசைவிற்கு பறவைகள் ஒவ்வொரு வடிவமாக மாறுவதாக ஆச்சரியத்துடன் வீடியோவை தவறாக பகிர்ந்து வருகிறார்கள். தவறான வீடியோக்களை பகிர வேண்டாம்.

முடிவு : 

நம்முடைய தேடலில், பறவைகளை அன்பால் பழக்கும் விந்தை மனிதர் என வைரல் செய்யப்படும் வீடியோ டிக்டாக் செய்யப்பட்ட வீடியோ என்றும், அது உண்மையான பறவைகள் அல்ல என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க