YouTurn

தமிழ்நாட்டு கடற்கரையில் ஒருவர் கஞ்சாவை காய வைத்துவிட்டு தூங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

தமிழ்நாட்டு கடற்கரையில் ஒருவர் கஞ்சாவை காய வைத்துவிட்டு தூங்கியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு கடற்கரையில் நடந்த சம்பவம் இது.

பரவிய செய்தி

ஜீரோ பெர்செண்டு கஞ்சா"புகழ் மாசு "சாருக்கு" யாராவது எடுத்து சொல்லுங்கப்பா...

ஓரே"அக்கப்போருப்பா!


image.png


X Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த 2025 டிசம்பர் 28ஆம் தேதி திருத்தணி இரயில் நிலையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நான்கு சிறுவர்கள் கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த நிகழ்வு தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு கஞ்சா போதை தான் முக்கிய காரணமென்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. 


இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த வாதம்  பெரும் விமர்சனத்திற்குள்ளானது. 


இந்நிலையில், ’கடற்கரையில் கஞ்சாவை காய வைத்துவிட்டு ஒருவர் தூங்கியது பற்றி ‘Behindwoods’ வெளியிட்ட செய்தியின் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திருப்பதாக பாஜகவைச் சேர்ந்தவர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார். 

உண்மை என்ன? 


Behindwoods’ தளத்தில் வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியை தேடினோம். அதில், ‘கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு கடற்கரையில், ஒருவர் கஞ்சாவை காய வைத்துவிட்டு தூங்கியதாகவும்; அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும்’ தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதனை அடிப்படையாகக் கொண்டு மேலும் தேடியபோது, ’The South First’ ஆங்கில செய்தித்தளத்தில் இது குறித்த ஒரு செய்தியைக் காணமுடிந்தது. அதிலிருந்து,  கோழிக்கோடு கடற்கரையில் கஞ்சாவை காய வைத்துவிட்டு அங்கேயே தூங்கிய நபர் முகமது ரபி என்பதும் அவர் கோழிக்கோடு நகரத்தில் ’வெள்ளயில்’ என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது. அவர் அவ்வாறு கஞ்சாவை காய வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருப்பதை கடற்கரைக்கு நடை பயிற்சிக்கு வந்தவர்கள் முதலில் கண்டு போலீஸார்க்கு தகவல் கொடுத்ததாக தெரியவருகிறது.



மேற்கூறிய விவரங்களிலிருந்து, இந்த சம்பவம் கோழிக்கோடு கடற்கரையில் நடந்தது, தமிழ்நாட்டில் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது.


முடிவு:


கேரளாவின் கோழிக்கோடு கடற்கரையில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக பாஜகவைச் சேர்ந்தவர் தவறான பரப்பி வருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க