யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் நுழைந்த மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்றால் தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக சமூக...
பரவிய செய்தி
இந்தியாவை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்றால், தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

விரிவான விளக்கம்
இந்தியாவில் நுழைந்த மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்றால் தமிழர்களை தவிர அனைவரும் வெளியேற வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக்கில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்ட பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களை பெற்று வைரலாகியது. ஃபேஸ்புக் குரூப்களில் கூட இப்பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னால், இதே கருத்து உடன் சட்டமேதை அம்பேத்கர் உடைய புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். மம்தா பானர்ஜி தமிழர்களை தவிர இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் அந்நியர்களே என எங்கு கூறினார் என தேடுகையில், அப்படியான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதிலிருந்து, அவை ஆதாரமில்லாத பதிவுகள் என அறிய முடிகிறது.
ஒருவர் கூறாத கருத்தினை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கவும் செய்துள்ளனர். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் வாழும் மக்கள் கண்டிப்பாக வங்க மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியதற்கு எதிர்ப்புகளும் நிலவி வருகின்றன.

" நாங்கள் பங்களா(வங்க மொழி)-ஐ முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். நாம் டெல்லி சென்றால் ஹிந்தி மொழி பேசுகிறோம், குஜராத் சென்றால் குஜராத்தி பேசுகிறோம். நான் அதை செய்வேன். நான் தமிழ்நாட்டிற்கு செல்லும் பொழுது, எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால், சில வார்த்தைகளை பேசுவேன். எனவே, இதே பாதையில் வங்கத்திற்கு வரும் நீங்கள் வங்க மொழியில் பேச வேண்டும் " என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
இதைத் தவிர்த்து, மம்தா பானர்ஜி இந்தியாவில் தமிழர்களை தவிர அனைவரும் அந்நியர்களே என கூறியதாக ஆதாரங்கள் இல்லை. அவ்வாறான பதிவுகள் தவறான பதிவுகளே !
ஃபேஸ்புக்கில் மம்தா பானர்ஜியின் புகைப்படத்துடன் பதிவிடப்பட்ட பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களை பெற்று வைரலாகியது. ஃபேஸ்புக் குரூப்களில் கூட இப்பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.இதற்கு முன்னால், இதே கருத்து உடன் சட்டமேதை அம்பேத்கர் உடைய புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். மம்தா பானர்ஜி தமிழர்களை தவிர இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் அந்நியர்களே என எங்கு கூறினார் என தேடுகையில், அப்படியான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. அதிலிருந்து, அவை ஆதாரமில்லாத பதிவுகள் என அறிய முடிகிறது.