யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
மல்லையாவிற்கு கடன் கொடுக்க வங்கிகளை நிர்பந்தித்த மன்மோகனும், சிதம்பரமும் முதல் குற்றவாளிகள் ! லண்டன் நீதிபதி தீர்ப்பு !

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
இந்திய வங்கி கடன்களால் லண்டனில் தஞ்சம் அடைந்த விஜய் மல்லையா தொடர்பான வழக்கில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் முதல் குற்றவாளிகள் என லண்டன் நீதிபதி தீர்ப்பு வழங்கியதாக ட்வீட் ஒன்றின் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
விஜய் மல்லையா வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அரசின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பெயரை குறிப்பிட்டு தீர்ப்புகள் ஏதும் வெளியாகியதா எனப் பார்த்தால் அப்படி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
ஆகையால், வைரல் செய்யப்படும் தகவலை எடுத்து ட்விட்டர் பக்கத்தில் யார் பதிவிட்டது என சேர்ச் செய்கையில், 2020 ஜூன் மாதம் இதே பதிவை பலரும் பகிர்ந்து இருக்கிறார்கள். ஆக, 2020-ல் பகிர்ந்த தகவலையே மீண்டும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.
Twitter link | Archive link
2020-ல் இப்படியொரு தீர்ப்பு வந்ததாக சர்வதேச செய்திகள் முதல் இந்திய செய்திகள் வரை எதிலும் வெளியாகவில்லை. எதன் அடிப்படையில் இப்படியொரு தகவலை பகிர்கிறார்கள் எனத் தேடிய போது, கடந்த ஆண்டிலும், தற்போதும் ஜூன் 2020-ல் East Coast daily எனும் இணையதளம் வெளியிட்ட செய்தியை வைத்தே பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், அந்த இணையதளம் அதற்கான ஆதாரத்தை ஏதும் வழங்கவில்லை.

மேற்கொண்டு தேடுகையில், 2019 டிசம்பரில் விஜயபாரதம் எனும் தமிழ் இணையதளம் ஒன்றில் ஆங்கிலத்தில் வெளியான அதே தகவல் தமிழில் வெளியாகி இருந்தது.

அதில், " வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ஜஸ்டிஸ் எம்மா அர்பனாட் கூறியதாவது, இந்தியாவில் இருக்கும் தாங்களே தங்களின் வங்கி விதிகளையும், அதன் விதிமுறைகளையும் விஜய் மல்லையாவின் ஏர்லைன் கம்பெனியான கிங்ஃபிஷருக்கு கடன் கொடுத்த போது முழுமையாக மீறியுள்ளனர். இதனை யாரும் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். இந்தியாவின் அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் சிதம்பரமும் வங்கிகள் மறுத்த போதிலும் விஜய் மல்லையாவிற்கு கடன் கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளனர். பல வங்கிகள் இதே விஜய் மல்லையாவை பிளாக் லிஸ்ட் செய்திருந்த போதிலும் அவர்களுக்கெல்லாம் வாய் மொழியாக கட்டளையிட்டு கடன் கொடுக்கும்படி காங்கிரஸ் அரசு நிர்பந்தப்படுத்தியுள்ளது என்று ஏற்கனவே கூறியுள்ளது லண்டனின் வெப்மினிஸ்டர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் " என வெளியாகி இருக்கிறது.

விஜயபாரதம் இணையதளம் இதற்கு ஆதாரமாக டெலிகிராப் இந்தியா உடைய செய்தியை அளித்து இருந்தது. ஆனால், அந்த செய்தி 2018 டிசம்பரில் வெளியானது. அதிலும், காங்கிரஸ் தலைவர்கள், முதல் குற்றவாளிகள் என நீதிபதி அர்பனாட் தீர்ப்பில் கூறப்பட்டதாக இடம்பெறவில்லை.
" கடன் கொடுத்த வங்கிகள் தங்களுடைய வழிகாட்டு நெறிமுறைகளை மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது என வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆர்பத்னாட்ஹட் கூறியதாக " 2018 டிசம்பர் 10-ம் தேதி பிபிசி தமிழில் வெளியான செய்தியில் வெளியாகி இருக்கிறது.
விஜய் மல்லையாவின் வழக்குகள் 2018-ல் கீழ் நீதிமன்றம் தொடங்கி 2020-ல் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என நகர்ந்து கொண்டு சென்று இருக்கிறது. 2018 தீர்ப்பில் நீதிபதி அர்பனாட் காங்கிரஸ் தலைவர்களை முதல் குற்றவாளிகள் எனக் குறிப்பிடவில்லை மற்றும் 2020 நீதிமன்ற தீர்ப்பிலும் அப்படி எந்தவொரு வார்த்தைகளும் இல்லை. ஆக, இது அரசியலுக்காக உருவாக்கப்பட்ட வதந்தியே.
முடிவு :
நம் தேடலில், மல்லையாவிற்கு கடன் கொடுக்க வங்கிகளை நிர்பந்தித்த மன்மோகனும், சிதம்பரமும் முதல் குற்றவாளிகள் என லண்டன் நீதிபதி தீர்ப்பு வழங்கியதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. அப்படி எந்தவொரு தீர்ப்பும் வெளியாகவில்லை என அறிய முடிகிறது.

இந்த ஊர்லதான்டா இதுக்கு பேரு பஸ்ஸு. துபாய்ல இதுக்கு பேரு #குப்பலாரி.
மல்லையாவிற்கு கடன் கொடுக்க வங்கிகளை நிர்பந்தித்த #மன்மோகனும் #சிதம்பரமும் முதல் குற்றவாளிகள்! லண்டன் நீதிபதி தீர்ப்பு!
இந்த ஊர்ல இவனுக பேரு #பொள்ளாதார_நிபுணர்...😂😂😂😂😂 pic.twitter.com/0AixfxqH6o
— Vijay (@Vijay76078862) June 7, 2020