YouTurn

மாலத்தீவு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டதாகப் பரவும் போலி ட்வீட்.. மாலத்தீவு படத்தை லட்சத்தீவு எனப் பதிவிட்ட ஒன்றிய அமைச்சர் !

மாலத்தீவு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டதாகப் பரவும் போலி ட்வீட்.. மாலத்தீவு படத்தை லட்சத்தீவு எனப் பதிவிட்ட ஒன்றிய அமைச்சர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஒரு டுவிட் போட்டு தன் நாட்டு கதையை முடிச்சிட்டா இந்த மாலத்தீவு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கிற அளவுக்கு ஆக்கிட்டாள்

X link

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்னர் அரசுமுறை பயணமாக லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். கடற்கரையில் எடுக்கப்பட்ட படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததும் அவை பேசு பொருளாகின. 

மோடியின் லட்சத்தீவு பயண குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேபோல் மோடி குறித்து அவதூறான கருத்துகளை மாலத்தீவு இணை அமைச்சர் மரியம் ஷியுனா மற்றும்  இளைஞர் நலத் துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர் என இந்தியர்களும் பதிலுக்கு #BoycottMaldives என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்யத் தொடங்கினர். 



X link

இந்நிலையில் மாலத்தீவு அதிகாரிகளின் இச்செயலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி முகமது முய்ஸு தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த (ஜன) 7ம் தேதி மன்னிப்பு கேட்டதாக ஸ்கீர்ன் சார்ட் ஒன்று பாஜக மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன ? 

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு மன்னிப்பு கேட்டதாகப் பரவும் தகவல் குறித்து அவரது அதிகாரப்பூர்வ X (எக்ஸ்) பக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த பதிவும் அப்பக்கத்தில் இல்லை. கடைசியாக ஜனவரி 5ம் தேதிதான் வேறொரு தகவல் பதிவிடப்பட்டுள்ளது. 



ஜனவரி 7ம் தேதி Archive செய்யப்பட்ட அந்த எக்ஸ் பக்கத்திலும் ஜனவரி 5ம் தேதி பதிவே உள்ளது. Social Blade என்னும் தளத்தின் உதவியுடன் முகமது முய்ஸு-யின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பதிவுகள் குறித்து ஆய்வு செய்ததில், ஜனவரி 7ம் தேதியன்று எந்த பதிவையும் அவர் நீக்கவில்லை என்பதை அறிய முடிந்தது. 



ஆனால், இந்தியப் பிரதமர் மோடி குறித்துப் பதிவிட்ட மாலத்தீவு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாலத்தீவு அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது பற்றி பிபிசி தமிழ் தளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் அச்செய்தியில் மாலத்தீவின் முன்னாள் துணைச் சபாநாயகரும் எம்.பியுமான ஈவா அப்துல்லா ANI-க்கு அளித்த நேர்காணலில் மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளதோடு, மாலத்தீவு அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து நேற்றைய தினம் (ஜன.7) மாலத்தீவு அரசு வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் நபர்களுக்கு எதிராக சமூக ஊடகத் தளங்களில் தரக்குறைவான கருத்துக்களை சிலர் பதிவிட்டது மாலத்தீவு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அக்கருத்துக்கள் தனிப்பட்ட நபர்களுடையது. அவை மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் அல்ல.

கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் பொறுப்பான முறையிலும், வெறுப்பு, எதிர்மறையைப் பரப்பாத வகையிலும் மாலத்தீவின் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இடையூறு செய்யாத வகையிலும் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்ததற்காக மாலத்தீவு அதிகாரிகள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், மாலத்தீவு ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவில்லை. அவ்வாறு பரவும் தகவல் போலியானது.


X link


லட்சத்தீவு குறித்து இத்தகைய பொய் செய்தி பரவிக் கொண்டிருக்க ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ லட்சத்தீவு எனக் கூறி வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



அவரது பதில் முதலில் உள்ள படம் ‘wallpapers13’ என்னும் தளத்தில் மாலத்தீவு என்று பதிவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள படம் பிரெஞ்சு பொலினீசியாவிலுள்ள போரா போராவில் எடுக்கப்பட்டது என்று ‘go way’ என்னும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது அப்பதிவை ஒன்றிய அமைச்சர் நீக்கி இருக்கிறார் .



முடிவு : 

நம் தேடலில், இந்தியப் பிரதமர் குறித்து மாலத்தீவு அதிகாரிகள் அவதூறாகப் பேசியதற்கு அந்நாட்டு ஜனாதிபதி மன்னிப்பு கேட்டதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அதே நேரத்தில் அவ்வாறு பேசியவர்களை இடைநீக்கம் செய்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க