YouTurn

மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியுள்ளதா? உண்மை என்ன?

மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியுள்ளதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மாலத்தீவு சென்ற போது, அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸுவுடன் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி மாலத்தீவில் உள்ள 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன என்று செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுகின்றன.

பரவிய செய்தி

மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியது. அதற்கான ஒப்பந்தத்தில் மொய்சு கையெழுத்திட்டார். தீவுகள் ஒப்படைக்கப் பட்டன.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 9 முதல் 11 வரை மாலத்தீவு சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அவர் மாலத்தீவு சென்ற போது, அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸுவுடன் சேர்ந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி மாலத்தீவில் உள்ள 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன என்று கூறி 2:11 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியுள்ளதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிந்தது. 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 9 முதல் 11 வரை மாலத்தீவு சென்றபோது, அங்கு 28 தீவுகளுக்கும், குடிநீர் மற்றும் கழிவுநீர் பாசன வசதி ஏற்படுத்துவது தொடர்பான திட்டங்களை மாலத்தீவு குடியரசுத்தலைவரான முகமது முய்ஸுவுடன் சேர்ந்து தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்திற்காக இந்தியா 920 கோடி ரூபாய் (110 மில்லியன் டாலர்) நிதியுதவி அளித்துள்ளது என்பதை ‘India Today’ வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறியமுடிந்தது. 

மேலும் இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கத்திலும் ஆய்வுசெய்து பார்த்தோம்.

அதில்,  மாலத்தீவில் உள்ள 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டனர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 


இதுதொடர்பாக மாலத்தீவு குடியரசுத்தலைவரான முகமது முய்ஸுவின் எக்ஸ் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசின் “PIB Fact Check” பக்கத்திலும்,  மாலத்தீவின் 28 தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பரவி வரும் செய்திகள் போலியானவை என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். 

இதன்மூலம், மாலத்தீவில் உள்ள 28 தீவுகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் பாசன வசதி ஏற்படுத்துவது தொடர்பான திட்டங்களை, இந்தியா தொடங்கி வைத்ததை, மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியுள்ளதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

முடிவு:

நம் தேடலில், மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியா வாங்கியுள்ளதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க