YouTurn

மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளையால் கிடைக்கும் உதவி என ஃபார்வர்டு வதந்தி !

மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளையால் கிடைக்கும் உதவி என ஃபார்வர்டு வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


மஃபா. பாண்டியராஜன் அறிவிப்பு. இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை. Admission Help line – 9962814432 அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும். தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.



.


விரிவான விளக்கம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இலவச கல்வி அறக்கட்டளை ஒன்றை துவங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு என பிரிவு வாரியாக கல்விக் கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்கு உதவுவதாக நீண்ட செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் ஃபார்வர்டு செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மாணவர்களுக்காக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.



Twitter link

அதில் உள்ள தொலைபேசி எண்ணை கொண்டு தேடுகையில் கடந்த 2017-ம் ஆண்டிலேயே இப்படியொரு தகவல் பரவி இருக்கிறது. ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவதாக பொய்யான ஃபார்வர்டு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது முதல்முறை அல்ல.



Facebook link

அதுமட்டுமின்றி, மாஃபா பாண்டியராஜன் தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பரப்பப்படும் ஃபார்வர்டு தகவல் பொய்யானது என மறுத்து பதிவிட்டு இருக்கிறார். ஃபார்வர்டு தகவல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பகிர வேண்டாம் என மாஃபா அறக்கட்டளை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாணவர்களுக்கு உதவி கிடைப்பதாக பொய்யான ஃபார்வர்டு தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க