YouTurn

எம்.பி வெங்கடேசன் மீனாட்சி திருக்கல்யாணத்தை நிறுத்த சொன்னதாக வதந்தி !

எம்.பி வெங்கடேசன் மீனாட்சி திருக்கல்யாணத்தை நிறுத்த சொன்னதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் என செய்திகளில் வெளியாகியது. இந்நிலையில், " மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது போல் மே...

பரவிய செய்தி

மதுரை மக்களுக்கு சமர்ப்பணம்.. அதான் அந்த ஆண்டவன் உங்களை இந்த வருஷம் பாக்க விரும்பல போல. சாமி இல்லை என்று பேசுபவனுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான். இனிமேலாவது சிந்தியுங்கள்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா மற்றும் தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் என செய்திகளில் வெளியாகியது.



இந்நிலையில், " மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது போல் மே 4-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் நிகழ்வும் ரத்து செய்ய வேண்டும். மதுரை வெங்கடேஷ் அறிவிப்பு " என மதுரை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் குறித்து நியூஸ் 7 தமிழ் நிறுவனத்தின் நியூஸ் கார்டு ஒன்றை பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

மதுரை தொகுதியின் எம்.பி மீனாட்சி திருக்கல்யாணத்தை ரத்து  என்ற கோரிக்கையை வைத்ததாக பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடும் பொழுது ஏப்ரல் 17-ம் தேதி நியூஸ் 7 தமிழ் முகநூல் பக்கத்தில், " ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து, மே 4-ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும். www.maduraimeenakshi.org  எனும் இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு " என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.



Facebook link | archive link 

அந்த நியூஸ் கார்டில், மதுரை எம்.பி வெங்கடேசன் திருக்கல்யாணத்தை ரத்து செய்யக் கோரிக்கை வைத்ததாக அவரின் புகைப்படத்துடன் எடிட் செய்து இருக்கிறார்கள். அதிலும், வெங்கடேஷ் என பெயர் பிழையுடன் எடிட் செய்து இருக்கிறார்கள்.



Twitter link | archive link 

ஏப்ரல் 19-ம் தேதி எம்.பி வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " உண்மைக்கு மாறான விஷமச் செய்தி காவல்துறையே நடவடிக்கை எடு " என மதுரை திருக்கல்யாணத்தை ரத்து செய்ய கூறியதாக தன்னுடைய பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கூறி காவல்துறைக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து வெளியிட்டு உள்ளார்.



மேலும் படிக்க : மதுரை எம்.பியின் உண்மையான கோரிக்கையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு.

மதுரை எம்.பி வெங்கடேசன் வைத்து போலிச் செய்திகளை பரப்புவது இது முதல்முறை அல்ல. " மதுரையில் உள்ள ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் இருக்கும் கோபுரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக இருப்பதால் அதனை நீக்க சொல்லி இருப்பதாக எம்.பி வெங்கடேசன் பெயரில் போலியான நியூஸ் கார்டு பரப்பப்பட்டது. ஆனால், அவரின் உண்மையான கோரிக்கையே வேறாக இருந்தது என நாம் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தோம்.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, "  மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது போல் மே 4-ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் நிகழ்வும் ரத்து செய்ய வேண்டும் என மதுரை வெங்கடேசன் கூறியதாக பரப்பப்படும் தகவல் போலியானது. தவறான தகவல்களை உருவாக்கி அரசியல் சார்ந்து பரப்பி வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…