YouTurn

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடு வெட்டப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே  மாடு வெட்டப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிவராமன் என்பவர் அன்னதானம் செய்வதற்காக ஆடு வெட்டிய வீடியோ திரித்துப் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இப்படி நடக்கிறது. இது கலவரத்திற்கு வழிவகுக்கும். தயவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவும்.

image.png

X link


விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி எனப்படும் ஆடு பலியிடும் சடங்கிற்கு எதிராக பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் மத ரீதியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். 

இதன் தொடர்ச்சியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாடு வெட்டப்படுவதாகவும் இதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீடியொ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

நாட்டார் தெய்வங்களுக்குக் கிடா, சேவல் வெட்டி படையல் போடுவது சிறு தெய்வ வழிபாட்டில் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த வீடியோவில் இருக்கும் நபர் யார்? எற்காக இதனைச் செய்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தோம்.

இது சிவராமன் என்பவர் மேற்கொண்ட நேர்த்திக்கடன் என்பதை அறிய முடிந்தது. இது குறித்துச் சாமியாடியாக உள்ள சிவராமனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “ஆடு பலி கொடுத்து ஜாதி, மதம் பார்க்காமல் உணவு வழங்குவதை சுமார் 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். இப்படி ஆண்டுக்கு இரண்டு முறை உணவிட்டு வந்த நிலையில், தற்போது ஒருமுறை செய்து வருகிறேன். ஆனால், இந்த முறை இது குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

கிடா வெட்டி ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உணவு வழங்கிவதை வீடியோ எடுத்து, மாற்று மதத்தினர் மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடு வெட்டுவதாகவும், இது கலவரத்தை ஏற்படுத்தும் என்றும் வதந்தி பரப்பியுள்ளனர். 

முடிவு: 

இந்து மதத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் ஆடு வெட்டி அன்னதானம் செய்வதை சுமார் 20 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். அந்த வீடியோவை மத ரீதியில் திரித்து வதந்தி பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க