யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் -மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வி.கே.சிங்

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் என ஒன்றிய பாஜக அரசின் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்து உள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தீனதயாள் உபாத்யாயா என்பவர் யார் என்றும், மதுராவில் பிறந்தவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கிறார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன ?
சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். 1951ம் ஆண்டில் இருந்து பாரதிய ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து பின்னர் 1967ல் தலைவராக மாறினார். ஆனால், 1968ல் தீனதயாள் உபாத்யாயா மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயரை சூட்ட உள்ளோம் என ஒன்றிய பாஜக அமைச்சர் கூறியதாக எந்த செய்திகளிலும் வெளியாகவில்லை.
Facebook link | Archive link
பரப்பப்படும் போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " மதுரை விமான நிலைய விரிவாகக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை..! - மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெனரல் திரு.வி.கே.சிங். " என்ற போஸ்டரே தமிழ்நாடு பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் டிசம்பர் 30ம் தேதி பதிவாகி இருந்தது கிடைத்தது.

மதுரை விமான நிலைய விரிவாகக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என ஒன்றிய இணை அமைச்சர் கூறியதாக வெளியான போஸ்டரில் மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டப்படும் என எடிட் செய்து உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பெயர் சூட்டப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளதாக பரப்பப்படும் போஸ்டர் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

மதுராவுல பொறந்தவனுக்கு, அங்க ஏர்போர்ட் இல்லன்னு, மதுரையில பேரு வக்கிறானுங்களாம். 👌👌👌 pic.twitter.com/zKK9kNZcep
— முகத்திரை (@mugathirai) December 31, 2022