YouTurn

ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என மதுரை ஆதீனம் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என மதுரை ஆதீனம் கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராமர் கோயில் - மதுரை ஆதீனம் வேதனை! ராமர் கோயில் திறப்பிற்குப் பின் தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன - மதுரை ஆதீனம் வேதனை


X link | Archive link 

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது. அதனைக் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 



இந்நிலையில் ராமர் கோயில் திறந்த பிறகுதான் நாட்டில் இரயில் விபத்துக்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவக் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ‘06.03.2024’ என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இப்படி ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் அவர்களது பக்கத்தில் இல்லை.

மேற்கொண்டு மதுரை ஆதீனம் இப்படி கருத்து தெரிவித்தது தொடர்பாக வேறு ஏதேனும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதா எனத் தேடியதிலும் அப்படி எந்த செய்தியும் இல்லை.

ராமர் கோயில் திறப்பதற்கு முன்னதாக மதுரை ஆதீனம் பேசிய வீடியோ ஒன்று கடந்த ஜனவரி 1ம் தேதிAsianet News Tamil யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.



அதில், ’நரேந்திர மோடி சாதாரண குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு பிரதமராக வந்துள்ளார். அவரது நாற்காலியைப் பறிக்க முயற்சிகள் நடக்கிறது. யாராலும் முடியவில்லை. இன்று அவரால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்று இருந்துள்ளது’ என மோடியைப் பற்றியும் ராமர் கோயில் திறப்பு பற்றியும் பெருமையாகச் சிலாகித்துப் பேசியுள்ளார்.  

இவற்றிலிருந்து மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது.

முடிவு : 

ராமர் கோயில் திறப்பிற்குப் பிறகு நாட்டில் இரயில் விபத்துக்களும் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளும் அதிகரித்துவிட்டதாக மதுரை ஆதீனம் கூறியதாக புதிய தலைமுறை பெயரில் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது. ஆதீனம் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை. புதிய தலைமுறையும் அப்படி நியூஸ் கார்டு வெளியிடவில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க