YouTurn

சென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் - RTI தகவல்

சென்னை ஐஐடி-யில் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு விதிமீறல் - RTI தகவல்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூன் 2019 நிலவரப்படி சென்னை ஐஐடி-யில் மொத்தம் இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதில், பல்கலைகழகத்தில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது...

பரவிய செய்தி

சென்னை ஐஐடி-யில் பேராசிரியர், துணை பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரப்பப்பட்ட முறையில் இடஒதுக்கீடு முறையின்றி விதிமீறல் நடந்து உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

விரிவான விளக்கம்

ஜூன் 2019 நிலவரப்படி சென்னை ஐஐடி-யில் மொத்தம் இருந்த 900 பணியிடங்களில் 684 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இதில், பல்கலைகழகத்தில் 12.4% பேர் மட்டுமே இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டவர்களில் 684 பேர்களில் 599 பேர் பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், ஆர்வலருமான இ.முரளிதரன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பி இருந்த கேள்விக்கு அளிக்கப்பட்ட தகவலில் " 2014 " முதல் தற்பொழுது வரை உள்ள பணி நியமனம் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன.

ஆர்.டி.ஐ தகவலில், " காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் ஓ.பி.சி பிரிவில் 66 பேர், எஸ்.சி பிரிவில் 16 பேர், எஸ்.டி பிரிவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். 2019-ல் வேலைக்காக விண்ணப்பித்த(எஸ்.டி, எஸ்.சி. ஓ.பி.சி பிரிவு) 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 2018-ல் விண்ணப்பித்த 682 பேரில் 16 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளன " என்ற தகவல் வெளியாகி உள்ளது.



நியமிக்கப்பட்ட பேராசிரியர்களின், 154 இடங்கள் கொண்ட ஓ.சி(பொது பிரிவு) பிரிவில் 273 பேரும், 84 இடங்கள் கொண்ட ஓ.பி.சி இடங்களில் 29 பேரும், 47 இடங்கள் கொண்ட எஸ்.சி பிரிவில் 5 பேரும், 23 இடங்கள் கொண்ட எஸ்.டி பிரிவில் 1 பேர் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று புவனேஷ்வரில் உள்ள ஐஐடியில் நியமிக்கப்பட்ட 52 துணை பேராசிரியர்களில் 3 பேர் ஓ.பி.சி பிரிவினர் மற்றும் ஒருவர் மட்டுமே எஸ்.சி பிரிவினர் என ஆர்.டி.ஐ தகவலில் கிடைத்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

இடஒதுக்கீடு விதிமுறையின்படி, பின்தங்கிய வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 49.5% இடங்களில் ஓபிசி பிரிவுக்கு 27%, எஸ்.ஐ பிரிவுக்கு 15% , எஸ்.டி பிரிவுக்கு 7.5% உள்ளன.

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி-யில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே இடஒதுக்கீட்டின்படி தேர்வான ஆசிரியர்கள் இருப்பதாக தெரிகிறது. நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி-யில் இருக்கும் 6,043 ஆசிரியர்களில் எஸ்.பி பிரிவினர் 149 பேர், எஸ்.டி பிரிவினர் 21 பேர் மட்டுமே.

ஜனவரியில் கல்வி அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ஐஐடி-யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஆரம்பக்கட்ட நியமனங்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு பொருந்தும் என தெரிவித்து இருந்தார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…