
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்


இதை பார்ப்பவர்களுக்கு சாதாரண மரம் என புரிந்து கொள்ள முடிந்தாலும், சாமானிய மக்கள் பலரும் உண்மை என நினைத்து " ஓம் நமச்சிவாய " என கமெண்ட் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?

பாவோபாப் எனப்படும் இவ்வகையான மரங்கள் மடகாஸ்கர், பிற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. பாவோபாப் வகை மரங்களில் தண்டு பகுதி பருமனாகவும், நீளமாகவும் இருக்கும் மற்றும் கிளை பகுதி சிறிதாகவே காணப்படும்.
Baobab is one of the strangest trees on earth and are often nicknamed the "upside down tree" for their root-like branches. There are 9 species of baobab in the world, and Madagascar, one of the world's biodiversity hotspots, is home to 6: https://t.co/z8IjpcZmNw
📷: maguzman83 pic.twitter.com/vW0MiNZh4D
— Stand For Trees (@StandForTrees) September 4, 2019
Twitter archive link
ஆப்பிரிக்கா நாடுகளில் மரங்களின் சிறப்பு என்றாலே பாவோபாய் மரங்கள் எனக் குறிப்பிடலாம். பாவோபாய் மரங்களில் மொத்தம் 9 இனங்கள் உள்ளன. பாவோபாய் மரங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது எனக் கூறுகின்றனர். ஆனால், பருவநிலை மாற்றங்கள் காரணங்களால் பழமையான பாவோபாய் மரங்கள் இறந்து வருகின்றன.

பாவோபாய் மரங்களில் உருளையாக இருக்கும் அடிப்பகுதியை சிவலிங்க வடிவில் இருப்பதாகக் கூறி ஃபோட்டோஷாப்பில் பட்டைய போட்ட புகைப்படத்தை உண்மை என நினைத்து பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இதை கிண்டலுக்காக செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், பலரும் இதை உண்மை என நினைத்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : 6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரமா ?| உலகின் பழமையான மரம் எது ?
இதற்கு முன்பாக, 6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரங்கள் என தவறான தகவல் ஒன்று வைரல் செய்யப்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், மடகாஸ்கர் நாட்டில் சிவலிங்க வடிவில் தோன்றிய மரம் என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் காணப்படும் பாவோபாப் மரங்கள் என அறிய முடிகிறது.