யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமெரிக்காவில் முடி வெட்டும் ரோபோ கடந்த 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையே. ஆனால் “நார்வேயில் சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம்” எனக் குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI வீடியோ.
பரவிய செய்தி
இது கற்பனை இல்ல... நிஜம்! சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம் - வீடியோ!
விரிவான விளக்கம்
"நார்வேயில் சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம்” எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் வீடியோவில், விரும்பும் சிகை அலங்காரத்தின் பெயரைக் கூறி முடி வெட்டு இயந்திரத்திற்குள், தலையை விட்டவுடன் சில வினாடிகளில் அதை முடியை வெட்டி விடுவதைத் தெளிவாகக் காண முடிகிறது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், அமெரிக்காவில் முடி வெட்டும் ரோபோ கடந்த 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையே என்பதை அறிய முடிந்தது. ஆனால் அது மனிதர்கள் செய்யும் நேரத்தைக் காட்டிலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதை காண முடிந்தது.
மேலும் பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “Overtime“ என்ற டிக்டாக் பக்கத்தில் பரவி வரும் வீடியோ “AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது. மேலும் வீடியோவில் முடி வெட்டும் இயந்திரத்தில் வெவ்வேறு சிகை அலங்காரம் செய்து கொள்ளும் மூன்று நபர்களின் முகமும் ஒரே மாதிரி இருந்ததையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிந்தது.

எனவே இதை உறுதி செய்ய, “Hive Moderation” இணையதளப் பக்கத்திலும் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

முடிவு:
அமெரிக்காவில் முடி வெட்டும் ரோபோ கடந்த 2020-ல் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையே. ஆனால் “நார்வேயில் சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ எந்திரம்” எனக் குறிப்பிட்டு தற்போது பரவி வரும் வீடியோ உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவக்கட்டது. இதன் உண்மைத் தன்மை அறியாமல் “மாலை மலர்” ஊடகம் இவ்வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.