YouTurn

அடுத்த பொய் செய்தி: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மாநில வரி காரணமாம் !

அடுத்த பொய் செய்தி: சமையல் எரிவாயு விலை உயர்விற்கு மாநில வரி காரணமாம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு. மத்திய அரசு வரி - ரூ.24.75/- மாநில அரசு வரி - ரூ.291.36/-. கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு யார் காரணம் என இப்போது புரிகிறதா மக்களே?



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை மாதம் மாதம் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இந்த விலை உயர்விற்கு யார் காரணம் என்கிற விவாதம் எழும் போது, மாநில அரசுகள் மட்டுமே அதற்கு முழு காரணம் என குற்றச்சாட்டும் பொய்யான தகவல்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது.



Archive link 

இந்நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு(கேஸ்) விலை நிர்ணயிப்பதில், அடிப்படை விலை 495ரூ, ஒன்றிய அரசின் வரி 24.75ரூ மற்றும் போக்குவரத்து செலவுடன் 529.75ரூ வருகிறது. அதனுடன் மாநில வரியாக 291.36ரூ, மாநில போக்குவரத்து 15ரூ, டீலர் கமிஷன் 5.50ரூ மற்றும் மானியம் 19.57ரூ என சேர்த்து மொத்தமாக 861.18ரூபாயாக பயனாளர்களுக்கு வந்து சேர்கிறது. இதில், ஒன்றிய அரசின் வரின் 5% மட்டுமே, மாநில அரசின் வரி 55% எனக் கூறப்பட்டு பதிவை பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மை என்ன ?

பெட்ரோல் மற்றும் டீசல் போல் இல்லாமல், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியே(GST) விதிக்கப்படுகிறது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு CGST மற்றும் SGST என இரண்டும் சேர்ந்து மொத்தம் 5% வரி விதிக்கப்படுகிறது. வீட்டு பயன்பாடு இல்லாத வணிகரீதியான சிலிண்டர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது.





2021 பிப்ரவரியில் சமையல் எரிவாயு தொடர்பாக விகடன் வெளியிட்ட கட்டுரையில், " 14.2 கிலோ சமையல் எரிவாயுவின் அடிப்படை விலை 710.09ரூ, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி(CGST) 19.29ரூ மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) 19.29ரூ , டீலர் கமிஷன் 61.33ரூ என மொத்தம் 810ரூ, அரசு தரும் மானியம் 24.95ரூ எனக் கூறப்பட்டு இருக்கிறது,

2021 ஜூலை மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 850ரூபாயாக உயர்ந்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநில வரி என்பது 24-30ரூபாய்க்குள் மட்டுமே இருக்கிறது. முன்பு போல் மானிய தொகை வருவதில்லை என மக்கள் நேரடியாக தெரிவிக்கவே செய்கின்றனர்.

முடிவு :

நம் தேடலில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஒன்றிய அரசு 5% வரி விதிப்பதாகவும், மாநில அரசு 55% வரி விதிப்பதாகவும் பரப்பப்படும் தகவல் பொய்யானது. மாநில அரசு வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவிற்கு வாட் வரி விதிப்பதில்லை. அதற்கு ஜி.எஸ்.டி வரியே விதிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு 2.5% மற்றும் மாநில 2.5% வரியே விதிக்கப்படுகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க