YouTurn

தேர்தல் கருத்துக்கணிப்பை நாங்கள் வெளியிடவில்லை-லயோலா நிர்வாகம்!

தேர்தல் கருத்துக்கணிப்பை நாங்கள் வெளியிடவில்லை-லயோலா நிர்வாகம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான " பண்பாடு மக்கள் தொடர்பகம் " கருத்துக்கணிப்பை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர். பண்பாடு மக்கள் தொடர்பகத்தின்...

பரவிய செய்தி

லயோலா கருத்துக்கணிப்பு- வாக்கு சதவீதம் திமுக கூட்டணி 49%, அதிமுக கூட்டணி 32%, மற்றவை 19% .

விரிவான விளக்கம்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு அமைப்புகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஏப்ரல் 5-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பான " பண்பாடு மக்கள் தொடர்பகம் " கருத்துக்கணிப்பை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர்.

பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவித்தனர். இதையடுத்து, லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு என செய்தி சேனல்கள் வெளியிட்டனர்.

எனினும், சன் டிவி உள்ளிட்ட சில செய்தி சேனல்கள், இணையச் செய்திகளில், சமூக வலைதளங்களில் லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என வெளியிட்டு வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்து லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.



லயோலா நிர்வாகத்தின் அறிக்கையில் " பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் அறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை " எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும், கடந்த சில  தேர்தல்களாக அவர்களின் நிர்வாகத்தின் சார்பில் எந்தவித கருத்துக்கணிப்புகளும் வெளியிடுவதில்லை எனவும், அதுபோன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடும் துறைகள் ஏதும் தங்கள் நிர்வாகத்திடம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என வெளிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கட்சி ஊடகங்கள் கருத்துக்கணிப்பை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இவ்வாறு தவறான தகவலை வெளியிடுவது தேர்தல் சமயத்தில் நடக்க வாய்ப்புகள் உண்டு.

ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக இருப்பது இயல்பாகி போனது. ஆகையால், மக்கள் இதுபோன்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.