YouTurn

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் படமென வதந்தி.. யார் இவர் ?

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் படமென வதந்தி.. யார் இவர் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் !



Facebook link

விரிவான விளக்கம்

மைசூர் அரசர் திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படம் என சில தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருவதை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். தற்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் உருவப்படம் என இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. நமது வாசகர்கள் தரப்பிலும் இதுகுறித்து கேட்கப்பட்டது.



இது பற்றி தேடுகையில், 2015-ல் இந்த புகைப்படத்துடன் மற்றொரு புகைப்படமும் இணைத்து ஆங்கிலத்தில் பகிரப்பட்ட முகநூல் பதிவு கிடைத்தது. இரண்டாவதாக உள்ள புகைப்படத்தில் இருப்பவர் திப்பு சுல்தான் இல்லை என சில ஆண்டுகளுக்கு முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : இது திப்பு சுல்தானின் புகைப்படமா ?



தற்போது பகிரப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில்," டான்சானியா நாட்டின் சான்சிபார் தீவின் சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் என Getty images இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் 1893 முதல் 96 வரை அதிகாரத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.



pantheon.world இணையதளத்தில் சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் பற்றிய குறிப்புகள் புகைப்படத்துடன் இடம்பெற்று உள்ளன.

முடிவு :

நம் தேடலில், லண்டனில் உள்ள திப்பு சுல்தானின் உருவப்படம் என பகிரப்படும் புகைப்படம் ஆனது டான்சானியா நாட்டில் உள்ள சான்சிபார் தீவின் 5 வது சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் உடைய புகைப்படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க