YouTurn

வெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா ?

வெட்டிக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல்.. வைரல் பதிவு உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாகிஸ்தான் நாட்டின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட இந்தியாவிற்குள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா முழுவதும் படையெடுக்குமா...

பரவிய செய்தி

வெட்டுக்கிளியை விரட்ட மிளகாய் கரைசல் ! பச்சை மிளகாய் 10 கிலோ பூண்டு 5 கிலோ சின்ன வெங்காயம் 5 கிலோ ஆகியவற்றை அரைத்து அதனுடன் நாட்டு மாடு மூத்திரம் சேர்த்து 10 லி கலந்து மூடி வைத்து இரண்டு நாள் கழித்து அதை வடிக்கட்டி 15 லி டேங்க்கிற்கு 2 லி என்ற அளவில் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு அடித்தால் வெட்டுக்கிளி, பூச்சி, வண்டு, எறும்பு, பாம்பு எதுவும் வராது. விவசாயிகள் அனைவரும் இதை பயன்படுத்தி பயிர்களை காப்பாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விரிவான விளக்கம்

பாகிஸ்தான் நாட்டின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் கூட இந்தியாவிற்குள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வெட்டுக்கிளிகள் தற்போது இந்தியா முழுவதும் படையெடுக்குமா, குறிப்பாக தமிழகத்திற்கு வருமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



Facebook link | archive link 

இதற்கிடையில், வெட்டுக்கிளிகள் உள்ளிட்ட பூச்சிகள் விவசாய நிலத்தை தாக்காமல் இருக்க மிளகாய் கரைசலை தயாரித்து பயிர்களுக்கு அடித்தால் விரட்டி விடலாம் என்ற தகவல் மீம் வடிவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விவசாயம் சார்ந்தவை, சமீபத்திய வெட்டுக்கிளி சார்ந்த பதிவுகளுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகம் என்பதால் இப்பதிவு அதிக அளவில் வைரலாகி உள்ளது.

உண்மை என்ன ?

ராஜஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகள் பயிர்களை தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த உள்ளதாக செய்திகளில் கூறப்பட்டது. இதுபோன்ற பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு அரிதானவை. இந்த மிளகாய் கரைசல் தகவல் யார், எதன் அடிப்படையில் உபயோகமாக இருக்கும் என கூறினார்கள் என்ற விவரங்கள் ஏதும் இல்லை. இந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

இந்த தகவல் தொடர்பாக Learn Agriculture எனும் விவசாயம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வரும் குழுவை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சி மாணவர் ஜி.கே தினேஷ்-ஐ யூடர்ன் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, பாலைவன வெட்டுக்கிளியை விரட்ட மிளகாய் கரைசலை பயன்படுத்த அறிவுறுத்திய தகவலை மறுத்து, தவறான தகவல் எனக் கூறி இருந்தார். மேலும், பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் அவர்களின் கேள்விகளுக்கு ஜி.கே தினேஷ் அளித்த பதிலை வீடியோவில் காணலாம்.



மேலும், வெட்டுக்கிளிகளை விரட்ட மிளகாய் கரைசல் பயன்படுத்துவது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் பூச்சியியல் துறையைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்று பார்த்தோம். ஆனால், சரியான பதில் கிடைக்கவில்லை. கிடைக்கும்பட்சத்தில் அதையும் இணைக்க உள்ளோம்.

வேளாண் நிலங்களில் பூச்சிகளை விரட்ட இயற்கையான பூச்சி விரட்டிகளை தயாரிப்பது  குறித்து TNAU போன்ற வேலணை பல்கலைக்கழத்தின் அதிகாரப்பூர்வ தளங்களில் அளிக்கப்பட்டு இருக்கிறது. சமூக வலைதளங்களில் விவசாயம் சார்ந்த எண்ணற்ற அறிவுரைகள் உலாவி வருகிறது. ஆகையால், பார்க்கும் அனைத்தையும் பகிர வேண்டாம், பயன்படுத்த வேண்டாம். உறுதியான தகவல்களை மட்டும் அறிந்து பயன்படுத்துங்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க