YouTurn

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இந்தியா 5 லட்சம் காகங்களை வாங்குவதாக நையாண்டி பதிவு !

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இந்தியா 5 லட்சம் காகங்களை வாங்குவதாக நையாண்டி பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஈரான், பாகிஸ்தான் நாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் ராஜஸ்தான் பகுதிகளில் பயிர்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உண்டாகும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில்...

பரவிய செய்தி

வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நியூசிலாந்தில் இருந்து 5 லட்சம் காகம் வாங்க மத்திய அரசு முடிவு 5000 கோடி நிதி ஒதுக்கீடு.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

ஈரான், பாகிஸ்தான் நாடுகளின் வழியாக இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்த வெட்டுக்கிளிகளின் கூட்டம் ராஜஸ்தான் பகுதிகளில் பயிர்களையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உண்டாகும் அபாயம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நியூசிலாந்தில் இருந்து 5 லட்சம் காகம் வாங்க மத்திய அரசு முடிவு 5000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முகநூலில் பிரேக்கிங் நியூஸ் கார்டு உடன் மீம் பதிவு உலாவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த காக்கைகளை பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா இருப்பதாக நையாண்டித்தனமாக நியூசிலாந்து நாட்டின் பெயரை பயன்படுத்தி உள்ளனர். மேலும், பிரேக்கிங் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என தெளிவாய் தெரிகிறது. ஆளும் இந்திய அரசை கிண்டல் செய்ய யாரோ பதிவிட்ட நையாண்டி பதிவே இது எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

கடந்த ஆண்டிலும் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு இந்தியாவின் குஜராத் பகுதிக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்தன. ஆனால், இந்த முறை பாதிப்பு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகம் என கூறப்படுகிறது. ஆகையால், வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் நிபுணர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.



மே 28-ம் தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், இந்திய அரசு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த ட்ரான்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உயர்ந்த மரங்கள் மற்றும் எளிதாக செல்ல முடியாத பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்தினை தெளிக்க 60 ஸ்ப்ரெயிங் இயந்திரங்களை வாங்க இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்ரான் எனும் நிறுவனம் மற்றும் மேலும் இரு நிறுவனங்களை இறுதி செய்து உள்ளதாக வெளியாகி இருக்கிறது.



2020 பிப்ரவரி 27-ம் தேதி பிபிசி-யில் வெளியான செய்தியில், பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு எதிரான சண்டைக்கு சீனா வாத்துக்களை அனுப்பலாம் என வெளியாகி இருந்தது. இயற்கையாகவே வாத்துக்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை. ஒரு கோழி நாளொன்றுக்கு 70 பூச்சிகளை உட்கொள்ளும் என எடுத்துக் கொண்டால் அதைவிட மூன்று மடங்கு அதிகமான பூச்சிகளை வாத்துக்கள் உட்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க