YouTurn

எல்.இ.டி பல்பு வாங்கியதில் 1 கோடி மோசடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சி என வதந்தி !

எல்.இ.டி பல்பு வாங்கியதில் 1 கோடி மோசடி.. அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சி என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி. ஒரு LED பல்பின் விலை ரூ.10 ஆயிரமா ? ரூ.1 கோடி மோசடி. திராவிட மாடல் ஆட்சியில்  டக்கன விட 40 வருசம் முன்னேறிட்டோம். தமிழ்நாடு வேற No.1 பணக்கார மாநிலமா மாறிப் போச்சு. அதான் விலையும் ஏறிப்போச்சு.

விரிவான விளக்கம்

திமுக ஆட்சியில், ஒரு எல்.இ.டி பல்பின் விலை ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்த அதிகாரிகள் சிக்குவதாக மீம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



Archive link



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் மீம் பதிவில் இடம்பெற்ற எல்.இ.டி பல்பு மோசடி பற்றிய பகுதி செய்தி ஊடகத்தில் வெளியானது போன்று இருந்தது. அதைப் பற்றி தேடுகையில் ஜூன் 16-ம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் க்ரைம் டைம் செய்தியில் தேனி பகுதியில் நிகழ்ந்த எல்.இ.டி பல்பு மோசடியில் அரசு அதிகாரிகள் சிக்குவது தொடர்பாக வெளியிட்டது என அறிய முடிந்தது.



Facebook link 

எல்.இ.டி பல்புகள் மோசடி குறித்த நியூஸ் 18 சேனலின் க்ரைம் டைம் செய்தியில் வெளியான வீடியோவில், " தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில்  எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் வரை மோசடி நடந்து இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது, சிக்கும் அதிகாரிகள் " எனக் கூறுவதை கேட்கலாம்.



கடந்த 2019-2020 ஆண்டு தேனி மாவட்ட பேரூராட்சிகளில் வாங்கப்பட்ட எல்.இ.டி பல்புகள் கூடுதல் விலைக்கு வாங்கி அரசு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பேரூராட்சிகளின் முன்னாள் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, 10 முன்னாள் செயல்அலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் என 13 பேர் மீது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

" ஒரு எல்.இ.டி பல்பின் விலை ரூ.1200 முதல் ரூ.2500 விலை மட்டுமே, ஆனால் ஒரு எல்.இ.டி பல்பின் விலையை ரூ.9987 மதிப்பீடு செய்து போலியான ஆவணங்களை தயாரித்து, அரசிற்கு சேர வேண்டிய ரூ.97 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்து உள்ளதாக தேனியை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது "  என மாலைமலர் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.இ.டி பல்புகள் வாங்குவதில் நடைபெற்ற மோசடியை திமுக ஆட்சியில் நடந்ததாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அதே மீம் பதிவில், " நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி" என அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததையும் திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக இணைத்துள்ளனர். இதைப் பற்றி முன்பே நாம் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி, அதிமுக ஆட்சியில் வந்த செய்தியை திமுக எனப் பரப்பி வருகிறார்கள் !

முடிவு : 

நம் தேடலில், நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ. 47 கோடி மற்றும் ஒரு LED பல்பின் விலை ரூ.10 ஆயிரமா ? ரூ.1 கோடி மோசடி, சிக்கும் அதிகாரிகள் எனப் பரப்பப்படும் மீம் பதிவில் உள்ள சம்பவங்கள் இரண்டுமே அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தவை, அவற்றை திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க