YouTurn

காஷ்மீரின் லால் சவுக்கில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டதாகப் பரவும் தவறான தகவல்!

காஷ்மீரின் லால் சவுக்கில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மூவர்ணக் கொடி கூட பறக்க முடியாத காஷ்மீர் லால் சவுக்கில் பிரபு ராமர் பகவான் அமைந்திருக்கிறார் இதுதான் மோடியின் வலிமை...! 

X link 

விரிவான விளக்கம்

ஜனவரி 22ம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளது. கோயில் திறப்பு தொடர்பாக கட்சிகளுக்கு இடையே ஆதரவு மற்றும் எதிரான கருத்துகள் நிலவுகின்றன.

குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் சொன்னதாகத் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், ‘நாங்கள் எந்த மதத்திற்கும் எந்த நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது. அங்கு கோயில் வருவது எங்களது பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கு இருக்கக் கூடிய மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியது தான் எங்களுக்கு உடன்பாடு கிடையாது’ எனப் பேசியது தற்போதைய சூழலில் முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. 



இப்படி ராமர் கோயில் திறப்பையொட்டி நாள்தோறும் வெவ்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தியத் தேசியக் கொடி கூட பறக்க முடியாமல் இருந்த காஷ்மீரில் மோடி ஆட்சியால் காஷ்மீர் லால் சவுக்கில் லேசர் ஒலி மூலம் ராமர் படம் ஒரு கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரப்பப்படுகிற வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், அது உத்தரகண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது. 

உத்தரகண்ட்  மாநிலம் டேராடூன் நகரத்தில் உள்ள மணிக்கூண்டு கட்டிடத்தில் ஜனவரி 17ம் தேதி ராமரின் படங்கள் லேசர் விளக்குகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டதாக ‘ANI’ தனது X (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது. பரவக் கூடிய வீடியோவில் இருப்பது போன்ற ராமர் படம் ANI வீடியோவில் 33வது வினாடியில் காண முடிகிறது. 



இது தொடர்பாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இணையதளத்திலும் செய்தி வெளியாகியுள்ளது. அதிலும் உத்தரகண்ட் என்றுதான் கூறப்பட்டுள்ளது. 



மேலும் கூகுள் மேப் Street view மூலம் டேராடூன் மணிக்கூண்டு மற்றும் காஷ்மீர் லால் சவுக் பகுதியில் உள்ள மணிகூண்டுகளை பார்த்ததில் வீடியோவில் இருப்பது காஷ்மீர் இல்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

[caption id="attachment_51380" align="aligncenter" width="699"] Lal Chowk, Kashmir[/caption]

இவற்றில் இருந்து உத்தரகாண்டில் எடுக்கப்பட்ட வீடியோவினை காஷ்மீர் எனத் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

முடிவு: 

காஷ்மீர் லால் சவுக் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டதாகப் பரவக் கூடிய வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள மணிக்கூண்டு கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க