YouTurn

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகல் என சத்தியம் சேனல் வெளியிட்ட தவறான செய்தி

லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகல் என சத்தியம் சேனல் வெளியிட்ட தவறான செய்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜகவில் இருந்து விலகுகிறேன் - லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி



Youtube link | Archive link 

விரிவான விளக்கம்

ண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக(இதற்கு முன்பாக அண்ணாமலையால் சஸ்பென்ட் செய்யப்பட்டு இருந்தார்) அறிவித்தார். இதையடுத்து, அண்ணாமலை தலைவரான பின் தமிழ்நாடு பாஜகவில் இருந்து பல்வேறு பாலியல் மற்றும் ஆபாச பேச்சுக்கள் குறித்த புகார்கள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இயக்குநரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நெறியாளர் முக்தார் நடத்திய நேர்காணல் வீடியோ ஆனது " பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜகவில் இருந்து விலகுகிறேன் - லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி " என்ற தலைப்பில் சத்தியம் நியூஸ் சேனலில் ஜனவரி 6ம் தேதி வெளியானது.



Twitter link | Archive link 



Archive link 

அந்த நேர்காணல் வீடியோவின் தம்நெயில் கார்டை சத்தியம் நியூஸ் முக்தார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து இருந்தார். இதையடுத்து, அந்த தகவல் தினகரன் செய்தி உள்பட சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

உண்மை என்ன ? 

நேர்காணல் வீடியோவின் தொடக்கத்தில் இருந்து, நீங்கள் பாஜக சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள், பாஜக மீது பாசம், திமுகவிற்கு எதிராக கருத்து வெளிப்படுத்தி உள்ளீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்குகிறார் நெறியாளர் முக்தார்.



ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள், அதை ஏற்பாடு செய்வது பாஜக, அதில் கலந்து கொண்டவர்கள் பாஜக முக்கிய நிர்வாகிகள், அந்த நிகழ்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர், அப்போ நீங்க எனக் கேட்ட கேள்விக்கு, " நான் பாஜகவின் ஆளே கிடையாது " என லட்சுமி ராமகிருஷ்ணன் (3 நிமிடம்) பதில் அளித்து இருக்கிறார். 18வது நிமிடத்திலும் நான் பாஜகவில் இல்லை, எந்தக் கட்சியிலும் இல்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து, நான் பாஜகவிலேயே இல்லை என மறுத்து லட்சுமி ராமகிருஷ்ணன் ஜனவரி 6ம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link 

ஜனவரி 8ம் தேதி, " நான் பாஜகவில் சேரவே இல்லை, அப்புறம் எப்படி வெளியே வர முடியும் ? இதுதான் இன்றைய பத்திரிகையின் தரம். திரித்தும் தவறாக மேற்கோள் காட்டுவது ! அண்ணாமலை வாதத்தில் சொன்னது சரிதான், ஊடகங்கள் சில ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளாத வரையில் மற்றவர்களை கேள்விக் கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை " என மற்றொரு ட்வீட் செய்து இருக்கிறார்.



Twitter link | Archive link 

லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்த பிறகும் கூட சத்தியம் நியூஸ் வீடியோவின் தலைப்பை மாற்றவில்லை, நெறியாளர் முக்தார் தன்னுடைய பதிவை நீக்கவும் இல்லை.

முடிவு : 

நம் தேடலில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாஜகவில் இருந்து விலகுகிறேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாக சத்தியம் நியூஸ் வெளியிட்ட செய்தி தவறானது. நான் பாஜகவில் கட்சியிலேயே இல்லை, அப்புறம் எப்படி விலக முடியும் என லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க