YouTurn

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவியா! உண்மை என்ன?

ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவியா! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவி செய்கிறது லாட்லி அறக்கட்டளை என்று பரவும் தகவல் தவறானது. இந்தப் பதிவு 2015 முதலே பரப்பப்பட்டு வருவதும் தெரியவந்தது.

பரவிய செய்தி

முக்கிய அறிவிப்பு... மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பம் மற்றும் உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் திருமண உறவைத் தீர்மானித்த பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்... திருமணத்திற்கான முழுச் செலவையும் லாட்லி அறக்கட்டளை மூலம் புதிய வாழ்க்கையை தொடங்க ஒவ்வொரு அன்பு மகளுக்கும் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும்...

லாட்லி அறக்கட்டளை 9871727415, 9873182468, 9717231663. இச்செய்தியை முடிந்தவரை பகிரவும், இதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும்....

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

மகளின் திருமணச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், சொந்த விருப்பத்தின் பேரில் உங்கள் மகளின் உறவைத் தீர்மானித்த பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் திருமணத்திற்கான முழு செலவையும் லாட்லி அறக்கட்டளையே ஏற்கும் என்றும், அந்த அறக்கட்டளை மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும்  9871727415, 9873182468,  9717231663 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் பதிவில் லாட்லி அறக்கட்டளை என்று மூன்று எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்களுக்கு தொடர்புகொண்டு பார்த்தபோது அது எதுவும் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பதிவில் குறிப்பிட்டிருந்த லாட்லி அறக்கட்டளை குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது GRASSROOTS JUSTCE NETWORK என்ற இணையதளத்தில் லாட்லி அறக்கட்டளை அறக்கட்டளை குறித்த தகவல்கள் கிடைத்தன. அதில் டெல்லியில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, சமூகத்தின் சில பிரிவுகளைச் சேர்ந்த பின் தங்கிய இளம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகச் செயல்படுகிறது. மேலும் 65,000க்கும் மேற்பட்ட பெண்கள் அதன் அசல் திட்டங்களால் நேரடியாகப் பயனடைந்துள்ளதும் தெரியவந்தது.

image.png


இதையடுத்து அந்த அறக்கட்டளையின் இணையதளப்பக்கம் கிடைக்கிறதா என்று தேடித் தொடங்கினோம். அப்போது Ladli Foundation என்ற முகநூல் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. அங்கு பல சமூக நடவடிக்கைகள் பற்றிய தகவல்களும், திருமணங்கள் மற்றும் பிற உதவி முயற்சிகள் பற்றியும் பார்க்க முடிந்தது. 


திருமணங்கள் நீதி குறித்து தகவல்கள் முகநூல் பக்கத்தில் இருக்கிறதா என்று தேடிய போது, 2015ஆம் ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று கிடைத்தது. அதில் மொழிபெயர்த்துப் படித்த போது, லாட்லி அறக்கட்டளை குறித்து வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அனுப்பப்படுவதாகவும், இதன் காரணமாக நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான அழைப்புகள் வருவதாகவும், அனைத்து அழைப்புகளுக்கும் பதிலளிக்க முடியாததால், எண்களை அணைத்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. 


மேலும் இது குறித்து தெரிந்துகொள்ள வேறு எதுவும் தகவல் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது Ladli Foundation-ன் எக்ஸ் பக்கத்தைப் பார்க்க முடிந்தது. அதில், 2023ஆம் ஆண்டு மார்ச் 19 மற்றும் ஏப்ரல் 11 அன்று பதிவு செய்யப்பட்ட இரண்டு ட்வீட்கள் கிடைத்தது. அதில் லாட்லி அறக்கட்டளை உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்யான கடிதம் அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும், திருமண விழாக்களுக்கு லாட்லி அறக்கட்டளை என்ற பெயரில்  1 லட்சம் ரூபாய் நன்கொடை அளிப்பதாகப் மீண்டும் பரவும் செய்தியை நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தனர். 

முடிவு : 

இறுதியாக நம் தேடலில், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை நிதி உதவி செய்கிறது லாட்லி அறக்கட்டளை என்று பரவும் தகவல் தவறானது. இந்தப் பதிவு 2015 முதலே பரப்பப்பட்டு வருவதும் தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.