YouTurn

தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 நிதி பெற உரிமை உள்ளதாக பரவும் போலி இணையதளம் !

தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 நிதி பெற உரிமை உள்ளதாக பரவும் போலி இணையதளம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமூக வலைதளங்களில், தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000 அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உள்ளதாக கூறி பரவும் www.labours.gov.za எனும் இணையதளம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. za என்பது தென் ஆப்ரிக்கா நாட்டின் டொமைன். மேலும், அந்த இணையதளத்தின் லிங்கை க்ளிக் செய்தால் error என்றே வருகிறது.பரவும் செய்தியில்...

பரவிய செய்தி

தொழிலாளர்களுக்கு ஒரு முக்கியான தகவல் !!. 1990 மற்றும் 2000-க்கு இடைப்பட்ட ஆண்டில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் இருந்து ருபாய் 1,25,000 அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உண்டு. இந்த சலுகையை எடுத்துக் கொள்ள உரிமை உள்ளவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சோதிக்கவும்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

சமூக வலைதளங்களில், தொழிலாளர்களுக்கு ரூ.1,25,000  அளவிலான நிதி நன்மையை பெற உரிமை உள்ளதாக கூறி பரவும் www.labours.gov.za எனும் இணையதளம் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல. za என்பது தென் ஆப்ரிக்கா நாட்டின் டொமைன். மேலும், அந்த இணையதளத்தின் லிங்கை க்ளிக் செய்தால் error என்றே வருகிறது.பரவும் செய்தியில் கூறுவது போன்ற எந்தவொரு நிதி நன்மையும் வழங்கப்படவில்லை.

" இந்திய அரசால் அப்படி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மோசடி இனையதளங்களில் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் " என PIB தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.



Twitter link | archive link 

தொழிலார்களுக்கு நிதி நன்மைகள் வழங்குவதாக போலியான இணையதளங்கள் சமூக வலைதளங்களில் பரவுவது முதல் முறையல்ல. கடந்த ஆண்டில், தொழிலார்களுக்கு 80,000 அளவிலான நிதி நன்மைகள் கிடைப்பதாகவும், அதற்கான பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பார்க்குமாறு EPFO உடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலியான இணையதளம் பரவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தொழிலாளர் நிதி நன்மையென EPFO பெயரில் போலியான இணையதளம்

தொழிலாளர்களுக்கு நிதி நன்மையை அளிப்பதாக பகிரப்படும் இணையதளங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல் பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க