YouTurn

குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் குப்பையில் கொட்டும் வீடியோவா ?

குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் குப்பையில் கொட்டும் வீடியோவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி






குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் குப்பைகளில் கொட்டுகிறது.








Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

சிவப்பு மற்றும் வெள்ளை நிற உடை அணிந்த நபர்கள் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து குறிப்பிட்ட தயாரிப்புகளை குப்பை வண்டியில் தூக்கி வீசும் காட்சி அடங்கிய 29 நொடிகள் கொண்ட வீடியோவின் நிலைத்தகவலில் குவைத் நாடு பிரான்ஸ் நாட்டின் அனைத்து தயாரிப்புகளையும் குப்பையில் கொட்டுவதாக இடம்பெற்று இருக்கிறது.





இவ்வீடியோ இந்தியா மட்டுன்றி சர்வதேச அளவில் முகநூல் உள்ளிட்டவையில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

முகமது நபியின் கேலிச் சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்த காரணத்திற்காக பிரான்ஸ் நாட்டின் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட பிறகு அந்நாட்டு அதிபர் மக்ரோங் தெரிவித்த கருத்திற்கு இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரான்ஸ் தயாரிப்புகளை தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்தன. அரபு நாடுகளில் சில நிறுவனங்கள் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டன.

இந்நிலையில், குவைத் நாட்டில் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் கொட்டுவதாக வைரலாகும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 மே மாதமே இவ்வீடியோ ட்விட்டர் உள்ளிட்டவையில் வெளியாகி இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவ்வீடியோ சவூதி அரேபியா நாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.



Twitter link | Archive link 

சவூதி அரேபியாவின் அல் அஹ்சாவில் சீஸ் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தும் என அறிந்த காரணத்தினால் குப்பையில் வீசியதாக சமூக வலைதளங்களில் கடந்த மே மாதம் இவ்வீடியோ வைரலாகி உள்ளன. ஆனால், அதற்கு நாட்டின் வர்த்தக அமைச்சகம் மறுப்பு தெரிவித்து இருந்தது



2020 மே 14-ம் தேதி வெளியான Gulf news செய்தியில், " அல் அஹ்சாவில் சீஸ் தயாரிப்புகளில் புற்றுநோய் பொருட்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோவில் உள்ள தகவல்களை சவூதி அதிகாரிகள் மறுத்துள்ளனர். மோசமான சேமிப்பு காரணமாக கெட்டுப்போவதற்கான அறிகுறிகள் தோன்றியதால் சீஸ் பொருட்களை பறிமுதல் செய்து அழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட உண்மையான வீடியோவே அது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் முகமது அல் ஹுசைன் கூறியதாக " வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பிரான்ஸ் அரசு தொழுகை நடத்தும் முஸ்லீம்கள் மீது தண்ணீரை அடித்ததா ?

முடிவு : 

நம் தேடலில், குவைத் நாட்டில் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை குப்பையில் கொட்டும் காட்சி என பரவும் வீடியோ தவறானது. அது 2020 மே மாதம் சவூதி அரேபியாவில் கெட்டுப்போன சீஸ் பொருட்களை அகற்றும் காட்சிகள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க