YouTurn

கோவையில் குண்டு வைக்க திட்டம் தீட்டியது திமுக என அழகிரி கூறியதாக வதந்தி!

கோவையில் குண்டு வைக்க திட்டம் தீட்டியது திமுக என அழகிரி கூறியதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவையில் நடந்த குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே அப்பொழுது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் தான் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி ஊடகத்திற்கு பேட்டி அளித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்...

பரவிய செய்தி

கோவையில் குண்டு வைக்க வெடிப்புக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே அப்போதைய ஆளுங்கட்சியான திமுக தான். ஸ்டாலினை இல்லை என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் - மு.க.அழகிரி.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

கோவையில் நடந்த குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டி கொடுத்ததே அப்பொழுது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் தான் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி ஊடகத்திற்கு பேட்டி அளித்ததாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர்கள் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. மு.க. அழகிரி கோவை குண்டு வெடிப்பு குறித்து திமுகவை சாடி கருத்து தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகவில்லை. மேலும், இப்படியொரு செய்தி வெளியாகி இருந்தால் சர்ச்சையாகி இருந்து இருக்கும்.



Facebook link | archived link  

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் நியூஸ் கார்டில் பரவும் செய்தி போலியானது என தந்தி டிவி வெளியிட்டு உள்ளது. தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டு லோகோ உடன் பகிரப்படும் நியூஸ் கார்டில் செய்தியை போட்டோஷாப் செய்து உள்ளார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளில் போலியான செய்தியை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வரும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் எதிர் கருத்து மட்டுமின்றி மக்களுக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் பரப்பப்படும் தவறான போட்டோஷாப் செய்திகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்க கேட்டுக் கொள்கிறோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…