YouTurn

தனுசின் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் துருக்கி விளம்பர பாடலின் காப்பி என வதந்தி !

தனுசின் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் துருக்கி விளம்பர பாடலின் காப்பி என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பழைய துருக்கி கோக்க கோலா விளம்பரத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட கொலவெறி பாடல்.

விரிவான விளக்கம்

3 திரைப்டத்திற்காக அனிரூத் இசையமைக்க நடிகர் தனுஷ் எழுதி, பாடிய "ஒய் திஸ் கொலவெறி" பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி உலகம் முழுவதும் கவனம் பெற்றது. அப்படிப்பட்ட பாடல் துருக்கி நாட்டின் கோக்க கோலா விளம்பரத்தின் பாடலை காப்பி அடித்து எடுக்கப்பட்டது என சமூக வலைதளங்களில் அந்த 2 நிமிட விளம்பரப் பாடலை பகிர்ந்து வருகின்றனர்.



உண்மை என்ன ? 

தனுசின் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் 2011-ம் ஆண்டு நவம்பர் 17 சோனி மியூசிக் இந்தியாவின் யூடியூப் சேனலில் வெளியாகியது. இதற்கு பிறகே துருக்கி நாட்டின் கோக்க கோலா விளம்பர பாடல் வெளியாகி இருக்கிறது.



2015ல் கோக்க கோலா விளம்பத்திற்காக "ஒய் திஸ் கொலவெறி" பாடலின் துருக்கி வெர்சன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து campaignindia எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.



 

இந்த விளம்பரம் கோக்க கோலாவின் யூடியூப் சேனலில் இடம்பெறவில்லை. எனினும், பிற யூடியூப் சேனல்களில் இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது. கொலவெறி பாடல் போன்று உருவாக்கப்பட்ட விளம்பர பாடல் என 2015-ல் பலரும் சமூக வலைதளங்களில் இவ்வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.



முடிவு : 

நம் தேடலில், பழைய துருக்கி கோக்க கோலா விளம்பரத்தில் இருந்து கொலவெறி பாடல் காப்பி அடிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. கொலவெறி பாடலை மையப்படுத்தியே துருக்கி விளம்பர பாடல் எடுக்கப்பட்டு உள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க