யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விராட் கோலி சைவ உணவு உண்பவராக மாறுவதற்கான முடிவு முற்றிலும் தன்னார்வமானது, அவரது முடிவை ஆதரிக்க உறுதியான மருத்துவ தரவு எதுவும் இல்லை
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலின் நேர்காணால் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தொகுப்பாளர் ஏன் சைவ உணவு? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விராட் கோலி, "சைவம் உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்பதால், என் வயிறு மிகவும் அமிலமாக மாறியது என்றும், இதனால் எலும்பிலிருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் வயிறு சரியாக வேலை செய்ய, அது காரமாக(alkaline) இருக்க வேண்டும்" எனவும் கூறினார்.
உண்மை என்ன ?
"நமது வயிற்றைக் கார நிலைக்கு மாற்றுவது அவசியமா ? மற்றும் "வயிறு அமிலமாக இருந்தால் நாம் சைவ உணவுக்கு மாறி இறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா?" போன்ற பொருத்தமான சொற்றொடர்களைப் பயன்படுத்தித் தேடினோம்.
அப்போது, ஆகஸ்ட் 22, 2023 அன்று கல்லீரல் மருத்துவர் ஒருவர், அதே பிரச்சினையைப் பற்று ஒரு முழுமையான ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரின் கூற்றுப்படி “வயிறு அமிலத்தன்மை கொண்டது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அப்படியே இருக்கும். அமில உற்பத்தி என்பது செரிமான செயல்முறைக்கு வயிற்றின் பங்களிப்பின் தனித்துவமான மற்றும் மைய அங்கமாகும், மேலும் உணவு அல்லது தண்ணீருடன் உட்கொள்ளப்படும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலைப் பாதுகாப்பதிலும் பங்கு வகிக்கிறது.”

பின்னர் விராட்டின் கால்சியம் குற்றச்சாட்டை விரிவாகக் கூறுகிறார். அதில் வயிறு அமிலமாக இருப்பதால், கால்சியம் கரைவதில்லை என்று மருத்துவர் கூறுகிறார். கால்சியம் இழப்பு இறைச்சி சாப்பிடுவதால் ஏற்படுவதில்லை. உண்மையில், இறைச்சியாக வழங்கப்படும் புரத உட்கொள்ளலை 1 கிராம்/கிலோ உடல் எடையிலிருந்து 2 கிராம்/கிலோவாக அதிகரிப்பதன் மூலம் கால்சியம் வளர்சிதை மாற்றம் (Calcium metabolism) பாதிக்கப்படவில்லை.
இதை ஒரு குறிப்பாக எடுத்துக்கொண்டு மேலும் தேடிய போது, ஆகஸ்ட் 23, 2023 அன்று CricXtasy என்ற இணையத்தள பக்கத்தில் இது குறித்த கட்டுரையைக் காண முடிந்தது.

மேலும் தேடிய போது, ”சமீபத்தில் விராட் கோலி அசைவ உணவைத் தவிர்ப்பதற்கான அறிவியல் பூர்வமாகத் தவறான காரணத்தைக் கூறினார். இந்த வீடியோவில், உண்மைகளை நாங்கள் பிரித்து, அவரது கூற்றுக்கு ஏன் அறிவியல் ஆதரவு இல்லை என்பதை விளக்குகிறோம்.” என்று மருத்துவர் அருண் குமார் பதிலளித்திருந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணமுடிந்ததது.
மேலே உள்ள தகவல்கள், விராட் கோலி சைவ உணவு உண்பவராக மாறுவதற்கான முடிவு முற்றிலும் தன்னார்வமானது என்பதையும், அவரது முடிவை ஆதரிக்க உறுதியான மருத்துவ தரவு எதுவும் இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன.
முடிவு:
எனவே, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வயிற்றின் அமிலத்தன்மை காரணமாகச் சைவ உணவுக்கு மாறியதாகவும், அதை கால்சியத்துடன் தொடர்புப்படுத்தியதும் தவறான தகவலாகும்.
