யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்நாடகாவைச் சேர்ந்த திரிஷா ஷெட்டி என்பவர் ஆடிய நடன வீடியோவை கிருத்திகா உதயநிதி எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
தமிழக முதல்வரின் மருமகளும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியும்மான கிருத்திகாவின் அற்புத நடனம். பாராட்டுக்கள்
விரிவான விளக்கம்
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இதே வீடியோ கல்லூரி ஆசிரியர் நடனம் ஆடியதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
தமிழக முதல்வரின் மருமகளும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியும்மான கிருத்திகாவின் அற்புத நடனம் . pic.twitter.com/xRBTZiN5eP
— எம்.தமிழ் செல்வி பாமகா (@Em34122Celvi) August 6, 2024
உண்மை என்ன?
பரவும் வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதியா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இந்த வீடியோ உள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த வீடியோவும் அவரது பக்கத்தில் இல்லை.
மேற்கொண்டு தேடியதில் பரவக்கூடிய வீடியோ ‘Trishaa Shetty (trishaashetty._)’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளதை காணமுடிந்தது. அப்பக்கத்தின் முகப்பில் (Bio) உள்ள இணைப்பில் அவர் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த திரிஷா ஷெட்டி நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் தான் நடனம் ஆடியதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த சிலர் அதில் இருப்பது கிருத்திகா உதயநிதி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
முடிவு:
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோவில் இருப்பது திரிஷா ஷெட்டி என்ற நடிகரும் நடனக் கலைஞரும் ஆவார்.