YouTurn

கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா ?| வைரலாகும் புகைப்படம் யாருடையது ?

கிம் ஜாங் உன் இறந்து விட்டாரா ?| வைரலாகும் புகைப்படம் யாருடையது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக் குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்து விட்டதாக முன்பு உறுதிப்படுத்தாத தகவல்கள் பரவி இருந்தன. தற்போது கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலை அடக்கம் செய்யும் காட்சி என ஓர் புகைப்படம் வைரல் செய்யப்படுகிறது. #Breaking A Beijing-backed satellite TV...

பரவிய செய்தி

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக பரவும் புகைப்படம்.

விரிவான விளக்கம்

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக் குறைவு காரணமாக மூளைச்சாவு அடைந்து விட்டதாக முன்பு உறுதிப்படுத்தாத தகவல்கள் பரவி இருந்தன. தற்போது கிம் ஜாங் உன் இறந்து விட்டதாகவும், அவரின் உடலை அடக்கம் செய்யும் காட்சி என ஓர் புகைப்படம் வைரல் செய்யப்படுகிறது.



Twitter link | archive link 

ஆனால், கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அப்படி பரப்பப்படும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியான புகைப்படமே.



2012-ம் ஆண்டில் வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் உயிரிழந்த பிறகு அவரின் உடல் காட்சிப்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கிம் ஜாங் உன் உடைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.



மேலும் படிக்க : வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்து விட்டாரா ?| ஆதாரமில்லா செய்திகள்.

கிம் ஜாங் உன் குறித்த உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகாத காரணத்தினால் பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆதாரமில்லாத மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…