
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்திய தேசியக்கொடியை அவமதிப்பதாகக் கூறி 11 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்களால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில், கையில் மஞ்சள் நிற கொடியுடன் இருக்கும் கூட்டம் ஒன்று, இந்தியக்கொடியை கால்பந்து ஒன்றில் சுற்றி, காலால் மிதிப்பது போன்றும் உள்ளது.
பாரதத்தின் தேசிய கொடியை அவமதிக்கும் இந்த கூட்டம் விவசாய கூட்டம் இதற்கு இங்கு முட்டு வேற pic.twitter.com/xkQ7ef6OYb
— Rkpetbjpwing (@manibjp234) February 18, 2024
பாரதத்தின் தேசிய கொடியை அவமதிக்கும் இந்த நாசகார கூட்டத்திற்கு ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆதரவாம். pic.twitter.com/feaHx9az07
— Muthukumar Subbaiah (@smkumarlakshmi) February 18, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. மேலும் இந்த வீடியோ கடந்த 2023 இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது.
An Indian man tried his best to defend the honour of Indian flag when Khalistan supporters were abusing India & Bharat Mata.
Just condemnation is not enough, now, Govt of India must revoke OCI/PIO cards of anti-India elements.
Note: Abusive language by Khalistanis in video. pic.twitter.com/XRtRrIqk3N
— Anshul Saxena (@AskAnshul) July 12, 2023
கடந்த 2023 செப்டம்பர் 27 அன்று Deccanherald ஊடகப்பக்கத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "காலிஸ்தானி பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் நரேந்திர மோடி அரசுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் , காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியக் கொடியை வெளிப்படையாக அவமதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவில், பல நபர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியிருப்பதைக் காணலாம். மேலும் அவர்கள் மூவர்ணக் கொடியை கால்பந்தில் சுற்றிக் கொண்டு உதைக்கிறார்கள். டொராண்டோவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தியக் கொடியை எரித்தனர்." என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று, Hindustantimes ஊடகத்திலும் இது குறித்து கடந்த 2023 ஜூலையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆன்லைனில் பரவும் வீடியோக்கள் காலிஸ்தானி ஆதரவு போராட்டக்காரர்கள் இந்தியக் கொடியை அவமரியாதை செய்வதாக காட்டப்பட்டு, சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 19 அன்று, கனடாவின் சர்ரேயில் காலிஸ்தான் புலிப் படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதற்குப் பதிலடியாக இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன " என்றுள்ளது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோவிற்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்பதையும், இது இந்தியாவிலேயே எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும் அறிய முடிகிறது.
மேலும் படிக்க: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் மது வழங்கப்படுவதாகப் பரப்பப்படும் பொய்!
மேலும் படிக்க: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் கூடிய கூட்டம் என காயத்ரி ரகுராம் பகிர்ந்த உ.பி பஜனை கூட்டம் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்திய தேசியக்கொடியை அவமதிப்பதாகக் கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. பரவி வரும் வீடியோ, 2023ல் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.