YouTurn

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் கூட்டாக ஒரு சிறுமியை கடிக்கும் வீடியோ எனத் தவறாகப் பரவும் கேரளா வீடியோ!

பரவிய செய்தி

கடவுளே இருதயம் நின்னது போல் ஆகுது


இதுவாடா திராவிட மாடல்



X LINK

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை கொடூராமாக  கடிக்கும் 0:30 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.



அதில், கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் முழபிலாங்காடு பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டு இருந்தன. மேலும், இது தொடர்பாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து Mirror Now ஃபேஸ்புக் பக்கத்தில் 2023ஆம் ஆண்டு ஜுன் 20ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அதில், ‘’கேரளா, கண்ணூர் | 8 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சிறுமி காயம் அடைந்தார்.’’ எனக் குறிப்பிட்டு இருந்தது.




மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்தில் 2023ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் தேதி இச்சம்பவம் குறித்து செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. 

இதுமட்டுமின்றி, தெருநாய்க்கடி குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட தரவின்படி 2023ஆம் ஆண்டில் அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 4,35,136 பேரும், தமிழ்நாட்டில் 4,04,488 பேரும் நாய்க்கடிக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன்மூலம் தமிழ்நாட்டில் மூன்று தெருநாய்கள் ஒரு சிறுமியை கடித்ததாகப் பரவும் தகவல் தவறானது எனத் தெளிவாகத் தெரிகிறது.


முடிவு:

நம் தேடலில்,  மூன்று தெருநாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு சிறுமியை கடிக்கும் காட்சி என வெளியான வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல. அது கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டதில் நடந்தது என அறியமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க