YouTurn

கேரள பள்ளிக் குழந்தைகள் குடியரசுத்தினத்தை புறக்கணித்தனரா ?

கேரள பள்ளிக் குழந்தைகள் குடியரசுத்தினத்தை புறக்கணித்தனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

குழந்தைகள் பச்சை நிறக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு சாலையில் நடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கேரளா பள்ளியில் வந்தே மாதரத்தைப் புறக்கணித்ததாகவும், கேரள பள்ளி குழந்தைகள் இஸ்லாமியக் கொடியுடன் இருப்பதாகவும் கூறும் இப்படத்தின் உண்மைத்தன்மை என்ன ? இதே படத்தை 2019 குடியரசுத்...

பரவிய செய்தி

குடியரசுத் தினத்தன்று கேரளாவில்  வந்தே மாதரத்தை புறக்கணித்த முஸ்லீம்கள்  பள்ளிகளில் இஸ்லாமியக் கொடியை ஏற்றியுள்ளனர்.

விரிவான விளக்கம்

குழந்தைகள் பச்சை நிறக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு சாலையில் நடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கேரளா பள்ளியில் வந்தே மாதரத்தைப் புறக்கணித்ததாகவும், கேரள பள்ளி குழந்தைகள் இஸ்லாமியக் கொடியுடன் இருப்பதாகவும்  கூறும் இப்படத்தின் உண்மைத்தன்மை என்ன ?

இதே படத்தை 2019 குடியரசுத் தினத்தில் மட்டுமின்றி 2017 சுதந்திரத் தினத்தன்றும் பதிவிட்டு உள்ளனர். அங்கும் இதே வாசகம்.



இதற்கு பின் நோக்கி சென்றால் 2014-ல் சுதந்திரத் தினத்தை புறக்கணித்ததாகவும் பதிவிட்டுள்ளனர். அங்கும் இதே படமே !

காணொளி :



ஒரே படம் ! ஒரே வாசகம் ! நீண்ட வருடங்களாக பரவுவதைப் பார்த்தால் நிச்சயம் போலியான செய்தியாக இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வர முடியும். ஆனால், அப்படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிய வேண்டும் அல்லவா ?



குழந்தைகள் கையில் இருக்கும் பச்சை நிறக் கொடி கேரளாவைச் சேர்ந்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியே ! கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.



“ இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அடுத்த தலைமுறையினர் எனக் கூறி இப்படம் IUML- VOICE OF INDIAN MUSLIMS என்ற முகநூல் பக்கத்தில் 2013 மே மாதம் 17-ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது “.



ஆக, இதுவும் வதந்தியே !

பச்சைக் கொடியை கண்டாலே உடனே பாகிஸ்தான் என்றும், முஸ்லீம் தீவிரவாத அமைப்பு என்றும் தேசப் பக்தி பொங்க பதிவிடுகின்றனர்.

படிக்க :  பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.

சுருக்கமாக

6 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் இஸ்லாமியக் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஊர்வலத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி நீண்ட வருடங்களாகவே வதந்திகள் பரப்பப்படுகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.