YouTurn

கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானைக்கு இறுதிச் சடங்கு செய்யும் புகைப்படமா ?

கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானைக்கு இறுதிச் சடங்கு செய்யும் புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காயை தவறுதலாக தின்ற கர்ப்பிணி யானை படுகாயமடைந்து சில நாட்களுக்கு பிறகு ஆற்றில் இறந்தது பேரதிர்ச்சியை அளித்ததோடு சமூக வலைதளங்களில் கண்டனங்களையும் பெற்றது. காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் யானை சிக்கியது பெரும் சர்ச்சையை...

பரவிய செய்தி

கேரளா மலப்புரம் மாவட்டத்தில் அன்னாசிப்பழ வெடியால் உயிரிழந்த யானைக்கு கடைசி சடங்குகள். 



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காயை தவறுதலாக தின்ற கர்ப்பிணி யானை படுகாயமடைந்து சில நாட்களுக்கு பிறகு ஆற்றில் இறந்தது பேரதிர்ச்சியை அளித்ததோடு சமூக வலைதளங்களில் கண்டனங்களையும் பெற்றது. காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் யானை சிக்கியது பெரும் சர்ச்சையை வெடித்தது. கர்ப்பிணி யானை இறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் குவிந்து இருந்தன.



யானை இறந்த பிறகு உடற்கூறாய்வு செய்த போது கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்தது. அந்த யானைக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்ட புகைப்படம் என மேற்காணும் புகைப்படம் இந்திய அளவில் பல மொழிகளில் பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

இறுதிச் சடங்கு செய்யப்படும் யானையின் இடது காலில் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கவனிக்க நேர்ந்தது. அதில், " தரலாபாலு " என கன்னட மொழியில் எழுதப்பட்டு உள்ளது. அதைக் கொண்டு தேடுகையில் 2015 நவம்பர் 12-ம் தேதி Taralabalu Jagadguru Brihanmath " எனும் முகநூல் பக்கத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. " Taralabalu matada anne gowri innila " என கூறப்பட்டுள்ள வார்த்தையை மொழிமாற்றம் செய்து பார்க்கையில் " தரலாபாலு யானை கௌரி இறந்து விட்டதாக " கூறப்பட்டுள்ளது.



Facebook link | archive link 

தரலாபாலு யானை கௌரி இறப்பு குறித்த வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது 2015 நவம்பர் 13-ம் தேதி ஒன்இந்தியா கன்னட மொழி பிரிவில் கௌரி யானையின் இறப்பு குறித்த செய்தி வெளியாகி உள்ளது.



தற்போது வைரல் செய்யப்படும் புகைப்படத்திலும், 2015-ல் ஒன்இந்தியாவில் வெளியான செய்தியில் இடம்பெற்ற புகைப்படத்தில் இருக்கும் துறவிகளை அடையாளம் காண முடிந்தது.



2015-ம் ஆண்டு கர்நாடகாவில் இறந்த கௌரி என்ற யானையின் இறுதிச் சடங்கு காரியத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை 2020-ல் கேரளாவில் இறந்த கர்ப்பிணி யானையின் இறுதிச் சடங்கு என தவறாக வைரல் செய்து வருகிறார்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க