YouTurn

ஐயப்பன் பக்தரை போலீஸ் எட்டி உதைத்ததாகப் பரவும் வதந்தி.

ஐயப்பன் பக்தரை போலீஸ் எட்டி உதைத்ததாகப் பரவும் வதந்தி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஐயப்பன் விவகார அலை அடித்து ஓய்ந்தப் பிறகு மீண்டும் அதைப் பற்றிய வதந்திகள் வரத் தொடங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியில் போலீஸ்கள் ஐயப்பன் பக்தரை எட்டி உதைக்கும் காட்சிகள் என இப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்நிகழ்வு எங்கே நடந்தது என்று பார்க்கலாம். எட்டி உதைக்கும் போலீஸ் கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு...

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

ஐயப்பன் விவகார அலை அடித்து ஓய்ந்தப் பிறகு மீண்டும் அதைப் பற்றிய வதந்திகள் வரத் தொடங்கி உள்ளன. கம்யூனிஸ்ட் ஆட்சியில் போலீஸ்கள் ஐயப்பன் பக்தரை எட்டி உதைக்கும் காட்சிகள் என இப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்நிகழ்வு எங்கே நடந்தது என்று பார்க்கலாம்.

எட்டி உதைக்கும் போலீஸ்

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசுக்கு முன் ஆட்சி செய்த  உம்மன் சாண்டி அரசின் ஆட்சியில் சோலார் முறைகேடு நடந்துள்ளதாக மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகியது. இது தொடர்பாக அன்றைய உம்மன் சாண்டி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்தன.

அதில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உம்மன் சாண்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி போராட்டங்கள் நடைபெற்றன. 2013 செப்டம்பர் 4-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கழக்கோட்டம் பகுதியில் உம்மன் சாண்டிக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தில் இளைஞர் ஒருவர் முதல்வருக்கு கறுப்புக்கொடியைக் காட்டியுள்ளார்.

அந்த இளைஞரை போலீசார் பிடித்து போலீசார் அடித்து உள்ளனர். அதில், துணை ஆய்வாளர் விஜயதாஸ் கறுப்புக்கொடி காட்டிய இளைஞரை முரட்டுத்தனமாக அடித்ததோடு எட்டி உதைத்தும் உள்ளார். அவரைச் சுற்றி அதிகளவில் போலீஸ் படை இருந்துள்ளது.



தாக்கப்பட்ட இளைஞர் ஜெயாபிரகாஷ் LDF ஆர்வலர் ஆவார். இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன்பின் சம்பந்தப்பட்ட துணை ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞரை போலீஸ் எட்டி உதைக்கும் ஒரு படத்தில் கருப்பு நிற வேஷ்டி அணிந்து இருப்பது போன்று இருக்கும். ஆனால், அவர் கருநீல நிறத்தில் பேண்ட் அணிந்து இருப்பார். முழு வீடியோவில் அதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதையறியாமல், மீண்டும் ஐயப்பன் விவகாரத்தைக் கையில் எடுத்து அரசியல் லாபத்திற்கு வதந்திகளைப் பரப்பத் தொடங்கி உள்ளனர்.

சுருக்கமாக

அடிப்பது கம்யூனிஸ்ட்களின் போலீஸ் அல்ல.. அடிவாங்கியவர் ஐயப்ப பக்தரும் அல்ல. 2013-ல் நடந்த நிகழ்வு.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.