YouTurn

இரயில் நிலையக் குடிநீர் குழாயை சிலுவை எனப் பரப்பப்பட்ட நையாண்டிப்பதிவு !

இரயில் நிலையக் குடிநீர் குழாயை சிலுவை எனப் பரப்பப்பட்ட நையாண்டிப்பதிவு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

பரவிய செய்தி

காவி சொந்தங்களே, கேரளாவில் ரயில் நிலையத்தில் ஆக்ரமித்து சிலுவை நட்ட பாவாடைகள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சிலுவை நட்டு நம்மை வம்புக்கு இழுத்துள்ளார்கள். ரயில்வே அமைச்சர் கண்ணுக்கு படும் வரை சேர் செய்யோம்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குழாய் அமைப்பின் புகைப்படத்தை காண்பித்து கேரளாவில் ரயில் நிலையத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் சிலுவையை நட்டதாகவும், ரயில்வே அமைச்சர் கண்ணிற்கு படும் வரை இதை ஷேர் செய்யுமாறு வெளியான பதிவை கிண்டல் செய்து பலரும் கிண்டல் செய்து பகிர்ந்து வருகின்றனர்.





தண்ணீர் குழாய் தொட்டிக்கும், சிலுவைக்கு வித்தியாசம் தெரியவில்லையா என பலரும் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் சங்கி, பாஜக ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், இந்த பதிவு குடிநீர் குழாய் என தெரியாமல் வெளியிட்டது அல்ல. அது நையாண்டிக்காக பதிவிட்டதாகும். Abhiram mini எனும் முகநூல் பக்கத்தில் ஜனவரி 8-ம் தேதி வெளியிட்டப் பதிவு குமரி தகவல் உள்ளிட்ட பிற முகநூல் குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. Abhiram mini முகநூல் பக்கத்தில் பாமக, பாஜக, அதிமுக கட்சி சார்ந்த கிண்டல் பதிவுகள், எதிரான பதிவுகள் பல பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மோடி ஆட்சியில் பெட்ரோலில் “டயமாட்டோல்” எனும் பொருள் சேர்க்கப்படுவதாக பரவும் நையாண்டிப்பதிவு !

நையாண்டிக்காக உருவாக்கப்பட்ட பதிவை உண்மை என நினைத்துள்ளனர். அரசியல் கட்சி, கொள்கைக்கு எதிரானவர்களுக்கு எதிராக நையாண்டிப்பதிவுகளை வெளியிடுவது சமூக வலைதளங்களில் அவ்வப்போது பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க : மோடி சந்திராயனில் தங்கத்தை வைத்து அனுப்பியதாக நையாண்டி பதிவு | யார் பரப்பியது ?

அந்த நையாண்டிப்பதிவுகளை உண்மை என நினைத்தும் கிண்டல் செய்வதையும், வைரல் செய்வதும் தொடர்பாக நாம் முன்பே பல கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க