YouTurn

கேரள வெள்ளத்தில் உதவிய மீனவர்களுக்கு போலீஸ் வேலை..!

கேரள வெள்ளத்தில் உதவிய மீனவர்களுக்கு போலீஸ் வேலை..!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

1924 ஆம் ஆண்டிற்கு பிறகு கேரளாவில் பெய்த கனமழைக் காரணமாக அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி பல மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளம், மலைச் சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. வெள்ளத்தால் பல இடங்களில் சிக்கிக் கொண்ட மக்களை பாதுகாப்பாக...

பரவிய செய்தி

வெள்ளத்தின் போது சேவை செய்த கேரள மீனவர்கள் 200 பேருக்கு போலீஸ் வேலையை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

விரிவான விளக்கம்

1924 ஆம் ஆண்டிற்கு பிறகு கேரளாவில் பெய்த கனமழைக் காரணமாக அம்மாநிலத்தின் அணைகள் நிரம்பி பல மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளம், மலைச் சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது.

வெள்ளத்தால் பல இடங்களில் சிக்கிக் கொண்ட மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் மீட்பு படையினர், போலீஸ் மட்டுமின்றி மீனவர்களின் பங்கு அளப்பறியது. மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து பல மீனவர்கள் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மீட்பு பணிக்காக கடல் பகுதியில் இருந்து மீனவர் சமூகத்தினர் 100-க்கும் அதிகமான படகுகளை தங்களிடம் இருக்கும் பணத்தினை செலவு செய்து கொண்டு வந்தனர். கேரளா சந்தித்த மிகப்பெரிய பாதிப்பில் சிக்கிக் கொண்ட 65,000-க்கும் அதிகமானோரை மீனவர் சமூகத்தினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்ட்விட்டரில், “ இந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். மீனவர்கள் சிறந்த மீட்பாளர்கள். 200 மீனவர்களை கடலோர பாதுகாவலர் ஆக நியமிக்க உள்ளோம். மேலும், மீன்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீட்பு பணி குழுவை மீனவர்களை கொண்டு உயர்த்த வேண்டும். இவ்விரு திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது “ என அறிவித்துள்ளார்.

கேரள வெள்ளத்தில் சிறப்பாக சேவை செய்த 200 மீனவர்களுக்கு அம்மாநிலத்தின் கடலோர பாதுகாப்பு போலீஸாக பணி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிபலன் பார்க்காமல் சிறந்த உதவியை அளித்த மீனவ மக்களுக்கு கேரள அரசு தகுந்த மரியாதையை அளித்துள்ளது.

“ கேரள மாநிலத்தின் தலைநகரில் நடைபெற்ற விழாவில் வெள்ளத்தில் சிறந்த பங்களிப்பை அளித்த மீனவர்களை பெருமைப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார் “

உதவி தேவைப்படும் இடங்களுக்கு மனித நேயத்துடன் உதவ முன்வரும் மீனவ சமூகத்தினர் நாட்டின் சிறப்பு கடற்படை வீரர்கள் என போற்றப்பட வேண்டியவர்கள்..

சுருக்கமாக

கேரள மீனவர்கள் 200 பேருக்கு கடற்படை பாதுகாப்பு பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பை கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.