YouTurn

கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா ?

கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் விஜயின் புகைப்படம் !



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

நடிகர் விஜயின் " மாஸ்டர் " திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மற்ற கேரள நடிகர்கள் புகைப்படத்துடன் விஜயின் புகைப்படம் வைக்கப்பட்டு இருப்பதாக மீம்ஸ் பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.



வைரலாகும் புகைப்படத்தில் நடிகர்கள் புகைப்படத்துடன் பிரதமர் மோடியின் ஓவியப் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. அதேபோல், புகைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் பகுதி அலுவலகம் போன்று இல்லை, விற்பனை கடை போன்று அமைந்திருக்கிறது.



Twitter link

புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " கோவளம் அருகே வெள்ளார் பகுதியில் கேரளா கைவினை கிராமத்தில் தளபதி விஜய் ஓவியம் " எனக் குறிப்பிட்டு நடிகர் விஜயின் ரசிகர் ட்விட்டர் பக்கமொன்றில்இப்புகைப்படம்  பகிரப்பட்டு உள்ளது.



Archive link 

கோவளம் அருகே வெள்ளார் பகுதியில் கேரளா கலை மற்றும் கைவினை கிராமத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜனவரி 16-ம் தேதி திறந்து வைத்துள்ளார். அங்குள்ள விற்பனை தளத்தில் நடிகர்களின் ஓவியம் வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் onmanorama.com எனும் இணையதளத்தில் ஜனவரி 17-ம் தேதி வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜயின் ஓவியப் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது. அது சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட கேரளா கலை மற்றும் கைவினை கிராமத்தில் இடம்பெற்ற புகைப்படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க