YouTurn

கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை கிழித்தவர் தாக்கப்பட்டதாக வெளியான தவறான செய்திகள் !

கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை கிழித்தவர் தாக்கப்பட்டதாக வெளியான தவறான செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பாஜக தொண்டரை தாக்கிய கால்பந்து ரசிகர்கள். கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை, கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் !



Twitter link | Archive link

விரிவான விளக்கம்

கத்தார் நாட்டில் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில், கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை அங்குள்ள கால்பந்து    ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக அடிபட்ட காயங்களுடன் இருக்கும் நபரின் புகைப்படம் சன் நியூஸ், கலைஞர் செய்திகள், மின்னம்பலம் உள்ளிட்ட செய்திகளும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.











Facebook link  

உண்மை என்ன ? 

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து பாஜகவைச் சேர்ந்த தீபக் இளங்கட்டை என்பவர் கிழித்து எறிந்ததாக வீடியோ ஒன்று வெளியாகியது. அது தமிழகத்திலும் செய்தியாக வெளியாகியது. இதைத் தொடர்ந்தே அந்த நபர் கால்பந்து ரசிகர்களால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது.



இதுகுறித்து கேரளாவின் பானூர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பேசிய போது, " போர்ச்சுகல் கொடி கிழிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அதன் தொடர்ச்சியாக எந்த வன்முறையும், தாக்குதலும் நடைபெறவில்லை. அந்த நபர் தாக்கப்பட்டதாக எந்த வழக்கும்(எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யவும் இல்லை " எனத் தெரிவித்து இருந்தனர்.

செய்திகளில் பாஜக நபர் போர்ச்சுகல் கொடியை கிழித்ததாகவே வெளியாகி வருவதால் , இதுகுறித்து பாஜகவின் பானூர் மண்டல பொறுப்பாளர் ஷிஜி லால் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, " சம்பந்தப்பட்ட நபருக்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் பாஜக உறுப்பினர் இல்லை. இதன் தொடர்ச்சியாக எதாவது நடவடிக்கை எடுத்தால் தனிப்பட்ட முறையில் அவரே சந்திக்க வேண்டும் " எனத் தெரிவித்து இருந்தார்.



வைரலான வீடியோவில் இடம்பெற நபரும், தாக்கப்பட்டதாக பரவும் புகைப்படத்தில் இருப்பவரும் வெவ்வேறு நபர்கள்.

முடிவு : 

நம் தேடலில், கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியை SDPI அமைப்பின் கொடி என நினைத்து கிழித்தெறிந்த பாஜக தொண்டரை கால்பந்து ரசிகர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது, அப்படி எந்த தாக்குதலும் நிகழவில்லை. மேலும், தாக்கப்பட்டதாக பரவும் நபரின் புகைப்படமும் தவறானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க