YouTurn

கீழடியில் சனாதன தர்மம் இருந்ததாக வதந்தி பரப்பும் மோடி ஆதரவு பக்கம் !

கீழடியில் சனாதன தர்மம் இருந்ததாக வதந்தி பரப்பும் மோடி ஆதரவு பக்கம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நீங்கள் எவ்வளவு அதிகமாக தோண்டுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சனாதன தர்மம் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கும் (கீழடி).



Facebook link 

விரிவான விளக்கம்

தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தின் வரலாற்று ஆதாரமாக கருதப்படும் கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியைக் குறிப்பிட்டு, நீங்கள் எவ்வளவு அதிகமாக தோண்டுகிறீர்களோ அவ்வளவு அதிமாக சனாதன தர்மம்(இந்து மதம்) இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கும் என Modifying india எனும் பிரதமர் மோடி ஆதரவு பக்கம் ஒன்றில் வெளியான பதிவு ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

தமிழ்நாட்டின் கீழடி குறித்து ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் பகிர்ந்தால் மக்கள் உண்மைத்தன்மையை அறியாமல் அப்படியே நம்பிவிடுகிறார்கள். அதற்கு உதாரணமே இப்பதிவு.

தற்போதுவரை கிடைத்துள்ள அகழாய்வு பொருட்களின் அடிப்படையில் 2600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் வரை எந்தவொரு மதம் சார்ந்த அடையாளங்களும், ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதை தமிழ்நாட்டில் உள்ளவர்கள் நன்கு அறிவர்.

கீழடியில் மதம் சார்ந்த ஆதாரங்கள் கிடைத்ததாக வதந்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக, பல மதங்களின் அடையாளங்கள், ஆதாரங்கள் கீழடியில் கிடைத்ததாக பலமுறை வதந்திகள் பரப்பப்பட்டு இருப்பதை நாம் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறோம்.

மேலும் படிக்க : கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ?

மேலும் படிக்க : கீழடியில் இஸ்லாமிய அடையாளம் கிடைத்ததாக பரவும் தவறான தகவல் !

மேலும் படிக்க  : கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக பரவும் வதந்தி !

மேலும் படிக்க  : கீழடியில் மதக் கடவுள்களின் சிலைகள் இருந்ததாக பரவும் வதந்திகளின் தொகுப்பு !

முடிவு :

நம் தேடலில், தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றை எடுத்துரைக்கும் கீழடியில் சனாதன தர்மத்தின்(இந்து மதம்) ஆதாரம் கிடைத்ததாக மீண்டும் வதந்திகள் பரவி வருகிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க