YouTurn

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக பரவும் வதந்தி !

கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கீழடியில் தொன்மையான தமிழர் நாகரீகம் தோண்ட தோண்ட கிடைத்து வருகையில் இன்றுவரை மதம்சார்ந்த எந்தவொரு அடையாளமும் கிடைக்கவில்லை என்றாலும் பல மதங்களுடன் ஒன்றிணைத்து வதந்திகள் ஏராளமாய் பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது. கீழடியில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக கீழ்காணும் வீடியோ முகநூல், யூடியூப்...

பரவிய செய்தி

கீழடியில் கிடைக்கப்பெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான் .



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கீழடியில் தொன்மையான தமிழர் நாகரீகம் தோண்ட தோண்ட கிடைத்து வருகையில் இன்றுவரை மதம்சார்ந்த எந்தவொரு அடையாளமும் கிடைக்கவில்லை என்றாலும் பல மதங்களுடன் ஒன்றிணைத்து வதந்திகள் ஏராளமாய் பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது. கீழடியில் இருந்து நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக கீழ்காணும் வீடியோ முகநூல், யூடியூப் உள்ளிட்டவையில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.



Facebook link | archive link 



உண்மை என்ன ? 

நடராஜர் சிலை எடுக்கப்படும் பகுதி அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தினைப் போன்றே இல்லை. ஒரேயொரு குழி மட்டுமே தோண்டப்பட்டு அதில் இருந்து சிலை எடுப்பது போல் அமைந்து இருக்கிறது. அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் ஊர் மக்கள் இத்தனை பேர் இருக்க வாய்ப்பில்லை. வீடியோவில் காவல்துறையைச் சேர்ந்தவர் உள்ளார். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டி இருக்கிறார்கள், அப்பகுதியைச் சுற்றி ஒரு சில கட்டிடங்களும் உள்ளன. ஆக, எளிதாக அகழாய்வு பணிகள் நடைபெறும் பகுதி அல்ல எனப் புரிந்து கொள்ளலாம்.



அடுத்ததாக, கீழடியில் நடராஜர் சிலை கிடைத்தது என்றால் தேசிய அளவில் செய்திகள் குவிந்து இருக்கும். ஆனால், ஜூன் 23-ம் தேதி முதல் பரவி வரும் சிலை தொடர்பாக எந்தவொரு செய்தியும் ஊடகத்தில் வெளியாகவில்லை. சில முகநூல் பதிவுகளும், சில மதம் சார்ந்த யூடியூப் சேனல்களில் மட்டுமே இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது.



இது குறித்து கீழடி அகழ்வாராய்ச்சி அலுவலர் ஆசைதம்பி அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, " அப்படி எந்தவொரு சிலையும் கிடைக்கவில்லை. அது முற்றிலும் வதந்தியே. இது குறித்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்து உள்ளோம். இப்படி தொடர்ந்து தவறான தகவல்களை ஏன் பரப்புகிறார்கள் எனத் தெரியவில்லை " எனக் கூறிஇருந்தார்.

நடராஜர் சிலை குறித்து தேடிய பொழுது அத்தி இணைய இதழ் எனும் யூடியூப் சேனலில் ஜூன் 25-ம் தேதி " மயிலாடுதுறையில் ஒரு நபர் தனது புதிய வீட்டிற்கு அஸ்திவாரம் தோண்டும் போது நடராஜர் சிலை கிடைத்தது " என இதே வீடியோவை பதிவிட்டு உள்ளார்கள்.



எனினும், மயிலாடுதுறையில் புதிய வீடு கட்ட தோண்டிய போது நடராஜர் சிலை கிடைத்ததாக எந்தவொரு செய்தியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தமிழகத்தில் நடராஜர் சிலை கிடைத்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. குழியில் இருந்து எடுக்கப்படும் நடராஜர் சிலை எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என உறுதியான தகவல் இல்லை. வீடு கட்ட தோண்டும் பொழுது கிடைத்த பழைய சிலையின் வீடியோவாக இருக்கலாம்.

மேலும் படிக்ககீழடியில் இஸ்லாமிய அடையாளம் கிடைத்ததாக பரவும் தவறான தகவல் !





நமது தேடலில், கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக வெளியாகும் தகவல் தவறானது. கீழடியை மதத்துடன் வைத்து பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று என அறிய முடிகிறது.






ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க