YouTurn

கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ.39 கோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு வெறும் ரூ.32 கோடி மட்டுமா ?

கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ.39 கோடி, பள்ளிக் கல்வித்துறைக்கு வெறும் ரூ.32 கோடி மட்டுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழகத்திலுள்ள மொத்த பள்ளி கல்வித்துறைக்கு 32 கோடியாம் !! ஒத்த சுடுகாட்டுக்கு மட்டும் 39 கோடியாம் !!



Facebook link

விரிவான விளக்கம்

மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர்களுக்கு வரிசையாக நினைவிடம் அமைத்து வருவது வழக்கமாகி விட்டது. அதிலும், கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், திமுக ஆட்சியில் அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கும் அரசியல் வட்டாரத்தில் எதிர் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையில், திமுக அரசு தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளி கல்வித்துறைக்கு ரூ.32 கோடியை மட்டும் செலவிட்டு, கருணாநிதியின் நினைவிடத்திற்கு ரூ.39கோடி செலவிடுவதாக சீமான் புகைப்படத்துடன் கூடிய ஓர் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

திமுக அமைச்சர் கே.என்.நேரு , " முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் தலைவர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மாண்புமிகு முதல்வர் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று அறிவித்தார். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு " என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link 

திமுக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தேடுகையில், " புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் பள்ளிக்கல்விக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு : உயர்கல்விக்காக ரூ.5,359 கோடி நிதி ஒதுக்கீடு " என ஆகஸ்ட் 14-ம் தேதி தினகரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது. 

திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்விதுறைக்காக ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், கடந்த நிதிநிலை அறிக்கையை விட இம்முறை ரூ.1,582 கோடி குறைக்கப்பட்டு இருப்பதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளி கல்விதுறைக்கு ரூ.32 கோடி என்றும், கருணாநிதியின் நினைவிடத்திற்கு மட்டும் ரூ.39 கோடி என்பது தவறான தகவல். பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.32,599.54 கோடியை வெறும் ரூ.32 கோடி மட்டும் என தவறாக பரப்பப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.

 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க