YouTurn

கருவறையில் இயேசு, மேரி படத்தை வைக்க பெண் எஸ்.பி வற்புறுத்தலா ?

கருவறையில் இயேசு, மேரி படத்தை வைக்க பெண் எஸ்.பி வற்புறுத்தலா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆஞ்சநேயர் கோவில் கருவறையில் ஏசு மற்றும் மேரியின் படங்களை வைத்து பூஜை செய்ய வற்புத்தியை பெண் SP ? உயர் அதிகாரியின் மதவெறி செயலால் கொதித்து போயுள்ள கர்நாடக மக்கள்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

கர்நாடகாவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இயேசு மற்றும் மேரியின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய பெண் எஸ்.பி ஒருவர் வற்புறுத்தியதாக மேற்காணும் புகைப்படம் பல்வேறு மொழிகளில் வெறுப்புணர்வு கருத்துக்களுடன் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள தீர்மானித்தோம்.

வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது கர்நாடகாவின் சமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேய கோவிலாகும். அனைத்து மத நம்பிக்கைக் கொண்ட மக்களும் தொடர்ந்து வழிபாடு செய்யும் இடமாக இக்கோவில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ந்த நேரத்தில் இக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது. அப்போது மாவட்ட எஸ்பி அந்த தாலுக்கா பகுதியில் நிகழ்ந்த வெள்ள நிவாரண பணியில் இருந்த போது மக்கள் அவரை கோவிலுக்கு அழைத்துள்ளனர். அவர் ஒரு கிறிஸ்தவர். கோவிலுக்கு வந்த சிறப்பு விருந்தினருக்கு இந்து தெய்வங்களின் புகைப்படங்களை பரிசாக வழங்கப்பட்ட போது, எஸ்.பி கிறிஸ்தவர் என்பதால் கோவில் அர்ச்சகர் இயேசுவின் புகைப்படத்தை பரிசாக அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கர்நாடகா மாநில போலீஸ் தவறான தகவலை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்து உள்ளது. கோவிலுக்கு வருகை தந்த பெண் எஸ்.பி கிறிஸ்தவர் என்பதால் அவருக்கு இயேசு புகைப்படத்துடன் இந்து தெய்வங்களின் புகைப்படமும் பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. அவர் எந்த புகைப்படத்தையும் எடுத்துச் செல்லவில்லை மற்றும் இயேசு புகைப்படத்தை வைத்து பூஜை செய்ய அர்ச்சகரை வற்புறுத்தவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களுடன் பரவி வருவதாகவும், கோவிலின் அர்ச்சகர் விளக்கம் அளித்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



Twitter link | archive link 

கோவிலின் அர்ச்சகர் விளக்கம் அளித்த வீடியோவும் ட்விட்டர் உள்ளிட்டவையில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றன. கோவிலைச் சேர்ந்தவர்களே இயேசு கிறிஸ்து புகைப்படத்தை வழங்க முடிவெடுத்தோம். எஸ்.பி என்னை வற்புத்தியதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. இந்த புகைப்படம் எந்தவொரு இந்துவின் மனதையும் புன்படுத்தி இருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என கோவில் அர்ச்சகர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

தவறாக புரிந்து கொள்தல் மற்றும் திட்டமிட்ட செயலால் கர்நாடகா கோவிலில் நிகழ்ந்த சம்பவம் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க