யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது கர்நாடகா மாநிலத்தின் பேகூரில் அமைந்துள்ள பஞ்சலிங்க நாகேசுவரர் கோயிலின் கோபுரம். இதை தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோவில் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
தமிழ்நாட்டுக் கோவில் என்று நினைக்கிறேன். கோபுரத்தில் தமிழில் “சிவசிவ” என்பதற்கு பதில் ஏதோ ஒரு குழப்பிய குறியீடு / சின்னம் இருக்கிறது. அபாயத்தின் அடையாளம் இந்தச் சின்னம்.
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டுக் கோவிலின் கோபுரத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த 'சிவசிவ' என்பதை நீக்கியதாகக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
புகைப்படத்தில் கோவிலின் கோபுரத்தில் ஓம் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.
தமிழ்நாட்டுக் கோவில் என்று நினைக்கிறேன். கோபுரத்தில் தமிழில் “சிவசிவ” என்பதற்கு பதில் ஏதோ ஒரு குழப்பிய குறியீடு / சின்னம் இருக்கிறது.
அபாயத்தின் அடையாளம் இந்தச் சின்னம். pic.twitter.com/oVC6hO4B94
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தமிழ்நாட்டில் உள்ள கோவில் அல்ல என்பதை அறிய முடிந்தது.
‘Bengaluru_trekker’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவில், பரவி வரும் புகைப்படத்தில் உள்ள அதே கோபுரத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும் அதில், கர்நாடகா மாநிலத்தின் பேகூரில் அமைந்துள்ள பஞ்சலிங்க நாகேசுவரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
இதே போன்று, ‘templesdownvindhyas’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படமும், பரவி வரும் புகைப்படத்தோடு கச்சிதாமாக பொருந்தின. மேலும் அதில், “பெங்களூருக்கு அருகில் உள்ள பேகூரில் உள்ள பஞ்சலிங்க நாகேஸ்வரா கோயில் மேற்கு கங்கா வம்சம் மற்றும் சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய மையமாக உள்ளது. இது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு 5 தனித்தனி சன்னதிகள் உள்ளன” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
மேலும் இது குறித்து கூகுள் மேப்பிலும் ஆய்வு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது தமிழ்நாட்டில் உள்ள கோவில் அல்ல, கர்நாடகா மாநிலத்தின் பேகூரில் அமைந்துள்ள பஞ்சலிங்க நாகேசுவரர் கோயில் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டின் கோவில் கோபுரத்தில் 'சிவசிவ' என்பதை நீக்கியதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.