YouTurn

கர்நாடகா கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா ?

கர்நாடகா கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

சிவமொகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடியை ஏற்றி மாணவர்கள் அட்டகாசம் !



Twitter link 

விரிவான விளக்கம்

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்தா அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் ஒரு கட்டத்தில் காவித்துண்டு அணிந்து மாணவர்களுக்கு இடையே மதம் வெறுப்பு பிரிவினையை ஏற்படுத்தி உள்ளது.







இந்நிலையில், சிவமொகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றிய வீடியோ கட்சி தேசிய அளவில் பரபரப்பை உருவாக்கியது. மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கி விட்டு காவிக் கொடியை ஏற்றியதாக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.

உண்மை என்ன ? 



Twitter link 

சிவமொகா கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடியை ஏற்றியதாக செய்திகள் பரவவே சிவமொகா எஸ்பி லஷ்மி பிரசாத், " தேசியக் கொடியை இறக்கி விட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த கம்பத்தில் தேசியக் கொடி இல்லை. காவிக் கொடி மட்டுமே கம்பத்தில் ஏற்றப்பட்டது, பின்னர் அதுவும் அகற்றப்பட்டது " எனத் தெரிவித்து இருந்தார்.



Twitter link 

மேலும், " சிவமொகா கல்லூரியின் முதல்வர் தனஞ்சயா, கொடி கம்பம் காலியாக இருந்தாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் இந்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவிக் கொடியை ஏற்றியுள்ளனர். ஜனவரி 26-ம் தேதியே தேசியக் கொடி இறக்கப்பட்டதாக கூறினார் " என டைம்ஸ் நவ் ஊடகத்தின் தீபக் போபண்ணா ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.



இந்நிலையில், இன்று காங்கிரஸ் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவிக் கொடி ஏற்றப்பட்ட கல்லூரியின் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியதாக வீடியோ வெளியாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப், காவித்துண்டு விவகாரத்தில் மாணவர்களுக்கு இடையே மதம் சார்ந்த மோதல் உருவாகியதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கம்பத்தில் தேசியக் கொடி இருந்தாலும் இல்லையென்றாலும் அது தேசியக் கொடிக்கான இடமே. நாட்டின் தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியது ஏற்க இயலாதது, கண்டிக்கத்தக்கது. அதற்கான கண்டனமும் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், சிவமொகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி விட்டு காவிக் கொடியை ஏற்றியதாக வெளியாகும் செய்திகள் தவறானது. காலியாக இருந்த தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க