யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகையில், முஸ்லீம் பெண்கள் போன்று ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக 27 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
முஸ்லீம் பெண்கள் போன்று பர்தா அணிந்து போலீஸ் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல் வீசியதாக இதே வீடியோ கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக கூட தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்ததாக இவ்வீடியோவை பரப்பினர்.
மேலும் படிக்க: தெலங்கானாவில் பர்தா அணிந்து கலவரம் செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கைதா ?
கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய BJP_RSS கட்சியை சேர்ந்தவர்கள் கைது #KarnatakaHijabRow #Karnataka #BJP pic.twitter.com/RYeSVLahix
— Tamilxp (@tamilxp) February 21, 2022
உண்மை என்ன ?
முஸ்லீம் பெண்கள் போன்று பர்தா அணிந்து போலீஸ் மீது பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல் வீசியதாக இதே வீடியோ கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக கூட தெலங்கானா மாநிலத்தில் நிகழ்ந்ததாக இவ்வீடியோவை பரப்பினர்.
மேலும் படிக்க: தெலங்கானாவில் பர்தா அணிந்து கலவரம் செய்ய முயன்ற ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் கைதா ?
2020 ஆகஸ்ட் மாதம், ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் பர்தா அணிந்து சட்டவிரோதமாக மது கடத்திய சிலரை போலீசார் கைது செய்த வீடியோ Etv எனும் ஆந்திர பிரதேசம் செய்தி சேனலில் வெளியாகி இருக்கிறது.
.
வீடியோவில் இடம்பெற்ற பர்தா அணிந்த அந்த நபர் தெலங்கானாவில் இருந்து ஆந்திராவின் கர்னூல் பகுதிக்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்தி சென்ற போது பிடிபட்டார். அப்போது உடையை களைத்து மது பாட்டில்களை எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவே இது.
முடிவு :
கர்நாடகா மாநிலத்தில் முஸ்லீம் பெண்கள் போன்ற வேடத்தில் ஹிஜாப் அணிந்து கொண்டு போலீசார் மீது கல் வீசிய ஆர்.எஸ்.எஸ், பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அது 2020-ல் ஆந்திராவில் பர்தா அணிந்து மதுபாட்டில்களை கடத்திய நபர் சிக்கிய போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.