YouTurn

கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா ?

கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கர்ணன் திரைப்படத்தில் தேவேந்திர குல வேளாளர் DKV



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பாய் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் கபடி விளையாடும் காட்சியில் அவரின் உடையில் " DKV " என சாதியக் குறியீடு இருப்பதாகவும், DKV என்பது தேவேந்திர குல வேளாளர் எனும் பிரிவு என்றும் இப்புகைப்படம் வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





ஆனால், திரைப்படத்தில் தனுஷ் அணிந்து இருந்த டி-சர்ட் உடையில் " DKV " என எழுதப்படவில்லை. இடைவேளை காட்சிக்கு முன்பாக இரு ஊர்களுக்கு இடையே நடைபெறும் கபடி போட்டியில் தனுஷ் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் அணிந்து இருந்த உடையில் பொடியன்குளம் என அவர்களின் கிராமத்தின் பெயர் மட்டுமே இருந்தது.



ஒருபுறம் கர்ணன் திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றிய விவாதங்களும், பதிவுகளும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாய் இருக்க, மறுபுறம் சாதிய அடையாளத்தை ஃபோட்டோஷாப் செய்து தவறான பதிவுகளும் பரப்பவும் செய்கின்றன.

முடிவு : 

நம் தேடலில், கர்ணன் திரைப்படத்தில் தனுஷ் அணிந்து இருந்த டி-சர்ட்டில் தேவேந்திர குல வேளாளர் என்பதை DKV எனக் குறிப்பிட்டு இருந்ததாக பரப்பப்படும் தனுஷ் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க