YouTurn

கங்கனாவிற்கு மோடியைத் தவிர மற்ற எல்லா நடிகர்களிடம் பிரச்சனை இருக்கு.. வைரலாகும் பகடி ட்வீட் !

கங்கனாவிற்கு மோடியைத் தவிர மற்ற எல்லா நடிகர்களிடம் பிரச்சனை இருக்கு.. வைரலாகும் பகடி ட்வீட் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

பரவிய செய்தி

கங்கனா ரனாவத்திற்கு நரேந்திர மோடியை தவிர நாட்டின் அனைத்து நடிகர்களிடமும் பிரச்சனை உள்ளது.

விரிவான விளக்கம்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக வெளிநாட்டு பிரபலங்கள் ட்வீட் செய்த போது ஆவேசமாக பொங்கியவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருபவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனால் கங்கனா ரனாவத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் மீம்ஸ், பதிவுகள் வெளியாகின.

இந்நிலையில், இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான நசீருதீன் ஷா, " கங்கனா ரனாவத்திற்கு நரேந்திர மோடியை தவிர நாட்டின் அனைத்து நடிகர்களிடமும் பிரச்சனை உள்ளது " என பிரதமர் மோடியை நடிகர் எனக் குறிப்பிட்டு வெளியான பதிவு இந்திய அளவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



உண்மையில், நடிகர் நசீருதீன் ஷாவிற்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ பக்கமே இல்லை. அவரின் பெயரை பயன்படுத்தி போலியான பக்கத்தை நடத்தி வருவதாகவும், அவர் ட்விட்டரில் இல்லை என அவரின் மனைவி ரத்னா பதாக் ஷா தெரிவித்து உள்ளார்.

Instagram link 
கடந்த ஆண்டே நசீருதீன் தன் பெயரில் இயங்கி வரும் போலியான ட்விட்டர் பக்கம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த போலியான ட்விட்டர் பக்கத்தை 60 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள்.








ட்வீட்கள் வைரலான எதிரொலியால், @naseeruddin_shah எனும் ட்விட்டர் பக்கத்தில், நசீருதீனுக்கு தொடர்பில்லை, பகடி எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்பாக, நசீருதீன் இயங்கி வரும் போலியான ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான ட்வீட்கள் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க