
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
இதையடுத்து, இன்று மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. போராட்டம் கலவரமாக மாறியது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பள்ளி மீது எந்த தவறும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
விசாரணை முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் தொலைகாட்சியில் கூறுவதை நேரடியாக நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே DGP தீர்ப்பு வழங்குகிறார் pic.twitter.com/Go9Qy4wl3t
— H Raja (@HRajaBJP) July 17, 2022
உண்மை என்ன ?
பள்ளி மீது எந்த தவறும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு குறித்து தந்தி டிவி சமூக வலைதள பக்கங்களில் தேடுகையில், அந்த பதிவு இடம்பெறவில்லை. ஆனால், அப்படியான செய்தியை வெளியிட்ட தந்தி டிவி பின்னர் நீக்கி இருக்கிறது.

" பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம். போராட்டக்காரர்களை வீடியோ காட்சிகளை வைத்து பின்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மீது எந்த தவறும் இல்லை - டிஜிபி சைலேந்திரபாபு " எனும் செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கி இருக்கிறது.